கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 18, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஹோமம்

 

 22 ஜன்னல்களும் 15 மர அலமாரிகளும் கொண்ட வீடாய்அது.4பெரிய அறைகளையும்,இரண்டு சிறிய அறைகளையும் கொண்டு நின்ற வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலராய். ஏன் அத்தனை அறைகள்,ஏன் அத்தனை கலர்கள் என்பது இன்று வரை மனம் புடிபடாத புதிராகவே/ கூடவே அந்த ஊரிலேயே பெரியதாக கட்டப்பட்ட அந்த வீட்டில் ஏன் இத்தனைஜன்னல்களும்,மரஅலமாரிகளும்என்பதும்தெரியாமேலேயே/ அடிக்கப்பட்ட கலர்களிலும்,கட்டிஎழுப்பட்டஅறைகளிலும்பணக்கார த்தனம் கை மீறி மிளிர்ந்து தெரிந்ததாக/ ரோட்டின் மீதாக அமைந்திருந்த அந்த வீட்டினுள்ளுருந்து ஜன்னல் வழியாக பார்த்தால் கண்மாய்க்கரையும் பக்கத்துதெருவும்,அதில் அடுக்கப்பட்டிருக்கிற


நல்ல குணம்

 

 கணேஷ் என்றாலே கலகலப்பு என்று கூறுவார்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஜாலியாகப் பொழுது போக்குவது, அரட்டை அடிப்பது, பணத்தை வைத்துக்கொண்டு கண்டபடி செலவு செய்வது எனத் திரிந்து கொண்டிருந்தான். அதே வகுப்பில்தான் நரேன் என்ற ஏழை மாணவனும் இருந்தான். எல்லோரிடமும் இனிமையாகப் பழகினாலும் மற்ற எந்த விஷயங்களிலும் அவர்களுடன் இணையாமல் பிரிந்து சென்றுவிடுவான். தான் உண்டு தன் கடமை உண்டு என்று இருப்பான். எல்லோரும் அவனை தனிப்பிறவி, புத்தர் என்றெல்லாம் கிண்டல்


உயிர்கள் பொது…

 

 அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள் சுவாதீனமாக உள்ளே வந்து போவதை வழக்கமாய்க் கொண்டிருந்தன. அதுவும் ஒரு கருப்பு ஆடும் வெள்ளை ஆடும் அதையே தொழிலாகக் கொண்டு தினமும் உள்ளே வந்து போய்க் கொண்டிருந்தன. வளாகத்தின் ஒரு மூலையில் சத்துணவுக்கூடம் இருந்தது. குழந்தைகளுக்கு சத்துணவு சமைக்கும் ஆயாக்கள் கொட்டுகிற காய்கறிக்கழிவுகளும் குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் கொட்டுகிற சத்துணவும்தான் அவற்றுக்கு உணவு. அவற்றைத் தின்று


மதியூக மரங்கொத்தி….

 

 காட்டுராஜா சிங்கத்துக்கு அன்று நல்ல பசி. எங்கெங்கு தேடியும் எந்த மிருகமும் அகப்படவில்லை. கடைசியாகத் தேடியலைந்து ஒரு மானைப் பிடித்தது. இருந்த பசியில் அந்த மானின் இறைச்சியை அவசர அவசரமாகத் தின்ன ஆரம்பித்தது சிங்கம். அப்படி அவசரமாகத் தின்றபோது, சிங்கத்தின் தொண்டைக்குள் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டது. அதன் விளைவாக சிங்கத்தின் தொண்டை பெரிதாக வீங்கிவிட்டதால், சிங்கத்துக்கு இறைச்சியை மென்று விழுங்குவது கஷ்டமான காரியமாக இருந்தது. வலியும் அதிகமாக இருந்தது. அப்போது மரக்கிளையொன்றில் தாவிக் கொண்டிருந்த குரங்கு


தூசியைப் போல…

 

 ஜெயராமும் கார்த்தியும் நண்பர்கள். வகுப்பில் ஜெயராமுக்கும் கார்த்திக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெயராம் மீதுதான். அதனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இரண்டு நாட்களாகவே தனியாகப் பள்ளி செல்லும் கார்த்தியிடம் காரணம் கேட்டார் அம்மா. அவன் நடந்ததைக் கூறினான். “என் கணக்கு நோட்டை ஜெயராம் வாங்கிட்டுப் போனான். மறுநாள் பள்ளிக்கு நோட்டைக் கொண்டு வர மறந்துவிட்டான். அதனால் கணித வகுப்பு முழுவதும் நான் வெளியில் நின்றேன். செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்த கோபத்தில் அவனைத் திட்டினேன். அதிலிருந்து