கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 16, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

 

 எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின் ஏன் இந்த விரிசல்? நினைக்க நினைக்க எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத் திருப்பியபடி போகிறாள். எனக்குள் குழப்பமாக இருந்தது. நான் எதுவும் தவ்று செய்யவில்லையே எல்லோரைப் போலவும்தான் நான் இருக்கிறேன். நினைத்து நினைத்து முடிவே கிடைக்கவில்லை. ராணி வந்தாள். அவசரமாக வந்து ‘இன்னிக்கு உங்க வீட்ல கொஞ்ச நேரம் என் பிரண்டோட பேசணும். அனுமதி தர முடியுமா?’ என்று


மின் மரம்

 

 செல்லாள் பள்ளம் போன்ற இறக்கத்தில் பதனமாக நிதானமாக இறங்கினாள். ஆங்காங்கு குடித்து விட்டு வீசிய பாட்டில்கள் உடைந்து சில்லுகள் கிடக்கலாம். புதுப்பொண்டாட்டியான செல்லாள் மறுவீடு புதுவீடு என நான்கைந்து நாட்களுக்காக தொடர்ந்த அலைச்சலுக்குப்பிறகு ஓய்ந்திருக்கிறாள். தனக்கு ஓய்வு வேண்டும். தன்னால் உறவினர்களின் ஊர்களுக்கு வரமுடியாது என உறுதியாகச் சொல்லிவிட்டாள். அடிவயிற்றில் வலி. காலண்டரைப் பார்த்தாள். சரியாக ஒத்தப்படை நாட்கள். பொழுது வெயிலுமில்லாமல் மழையுமில்லாமல் ”உம்“மென்று புகைந்து கொண்டிருக்கிறது. குச்சு வீடுகளின் வாயிலில் தண்ணீர் காயவைக்கும் புகையும் எரிக்கும்


ஒரு வெள்ளை அறிக்கை

 

 ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான் பணியாற்றுகிறாள் என்ற விபரமே அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. அதுவே அவளிடம் கொஞ்சம் நெருங்கிவிட்டதைப் போலத் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருந்தாலும், இப்போது பார்க்க நேர்ந்ததில் ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தான். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, ஊரில் இருக்கையிலேயே அவள் அழகு தன்னை வசீகரித்திருந்ததும், இவளெல்லாம் எங்கே தனக்குக் கிடைக்கப்


அப்பாவின் புத்தக அலமாரி

 

 காலையில் கண் விழித்ததும் அசதியாக இருந்தது. இரவெல்லாம் சரியாக உறக்கம் இல்லை. விழித்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாத ஒரு மயக்கநிலையிலேயே இரவு கழிந்துவிட்டது. ஏதேதோ கனவுகள் வேறு. உடல் வலியைவிட மன அசதியே பெரிதும் இருந்தது. அனு பக்கத்தில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். இந்திரா முன்னதாகவே எழுந்துவிட்டாள். எப்போதுமே அவளுக்கு தினம் சீக்கிரமே விடிந்துவிடுகிறது. எனக்கோ நேரமாக எழுந்திருப்பது என்றாலே மிகச் சிரமமான காரியம். காலை நேரத்தின் ஓசைகள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. எனக்கோ இரவின் ஓசைகள்தான்


மனச்சரிவு விகிதம்

 

 ”ஷூட்டிங் போயிருக்கார்! இப்பப் பார்க்க முடியாது!” வாட்ச்மேன் வாசலிலேயே மறித்தார். அவர் வேலை அது. அவருக்கு என்னையோ, என் சைக்கிள் வாடகையோ, என் காலைப் பட்டினியோ தெரியாது. சுதாகரை, தர்பார் சுதாகர் என்றால் உங்களுக்குத் தெரியும். தர்பார் என்ற மசாலா சினிமாவை இயக்கி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என் மூன்று மொழிகளிலும் வெள்ளி விழா கண்டு, தமிழ் சினிமா டைரக்டர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டும் இன்றைய தேதிக்கு நான்கு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கியிருக்கும் ஹாட் டைரக்டர்.