கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 13, 2013

21 கதைகள் கிடைத்துள்ளன.

எப்படி சொல்வேன்

 

 அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆர்த்தியை இன்று சந்திப்போம் என்று சங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டான். அவ்வளவு கூட்ட நெரிசலிலும் ஆர்த்தி சங்கரை அடையாளம் கண்டுக்கொண்டாள். முகத்ததை திருப்பிக் கொண்டு நகர நினைத்தவனை அவனின் பெயரை சொல்லி அழைத்து கையசைத்தாள். “ஹாய்” சங்கர் எப்டி இருக்க என்றால் அழகான புன்னகையோடு. சங்கர் பொய்யான புன்னகையை வரவழைத்துக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினான். புழைய விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தி ஏதேதோ அவள் பேசினாள். ஆனால் சங்கரோ அவள் பேச்சிற்கு தலையை


நீ நான்

 

 சொல்லப்போனால் இந்த வீட்டிற்கு அது வந்து போன பிறகிலிருந்து தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. இப்போதெல்லாம் நானும் தைரியமாக வீட்டை வளைய வரத்தான் செய்கிறேன் . எல்லோர் முகத்திலும் ஒரு விதமான திகைப்பும்ää சந்தேகமும் நிழலாகக் கிடக்கின்றன. கிடக்கட்டும்…… இதனைத் தொடர்ந்து சம்பவங்களை நான் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். எப்போதும்; மூடியே இருக்கும் கதவுக்குப்; பின்னே உள்ள தெருக்களில் கூட சலசலப்பு எழ ஆரம்பித்துவிட்டது. நான் இந்த வீட்டிற்கு முதன்; முதலில் வந்த போது கூடத்தான்


போட்டோ

 

 பரபரப்பாய் இருந்தது, ராமுத்தாயிக்கு. போட்டோவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணாடி உடம்போடு சேர குளிர்ச்சியாக இருந்தது. எத்தனை நாளாய் இப்படி ஒரு போட்டோ பிடிக்க வேண்டுமென்று அவளுக்குக் கனவுகள். இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது போலிருந்தது. போட்டோவைப் பார்த்தாள். ராமுத்தாயின் முகம் சுருக்கமாய் இருந்தது. எத்தனை கவலை ரேகைகள் முகத்தில். எத்தனை கஷ்டங்கள் வாழ்க்கையில், கஷ்டங்களும் அழுகைகளும் முகத்தில் ரேகைகள்போல ஆக்கிவிட்டது. வயதாகி விட்டதல்லவா இதற்குமேல் இதையெல்லாம் எதற்கு நினைக்கவேண்டும் என்று நினைத்தாள். ஒரு கையில் போட்டோவைப்


பெருந்திணைக் காமம்

 

 கதிரேசன் பூச்சிமருந்து குடித்துவிட்ட செய்தி எனக குத் தெரிந்தபோது வானம் கருத்து விண் மீன்கள் பூத்திருந்தன. நிலா வெளிச்சம் கடல் நீரின்வெண்மைபோலப் படர்ந்திருந்தது. சித்திரை மாதத்துக் கோடையின் அனல் காற்று பு ழு க்கத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது. நிறமற்ற ரத்தம்போல் வியர்வைத் துளிகள் வழிந்தன. என் இதயப் படபடப்பும் மூச்சுக காற்றின் சத்தமும் அந்த இடத்தின் மௌனத்தைச் சிதறடித்தன. உறக்கத்திலிருந்து விடுபட்டிருந்தாலும், அது ஒருவேளை கனவோ என நினைத்தேன். கனவாகவே இருந்துவிடக கூடாதா என்று விரும்பியபடியே படுக கையைவிட்டு


பைத்திய ருசி

 

 பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள வேர்கள் குடித்துக்கொண்டிருந்த நதி எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தது. புனல் பெருக்கோடும் ஆர்ப்பாட்ட வேகமும் இல்லை, நீரின்றி நிலம் காட்டி மணல் நரம்பை வெயிலில் விரிக்கும் நிசப்தமும் இல்லை. நீர் நீராகவே கொள்ளும் நித்திய நதி. நீரின் நிறமும் குணமும் மாற்ற முயற்சித்துத் தோற்ற வெயில் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். உதிர்ந்த சருகுகளின் மீது மாலை வெயில் புரண்டு