கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 9, 2013

10 கதைகள் கிடைத்துள்ளன.

புரோட்டா சால்னா…

 

 கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய வைத்திருந்த பணம் கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. மணிகண்டனின் கடை இருக்க பயமேன் என்கிற சொல்லாக்கம் உருப்பெற்று விட்ட நிலைத்துவிட்டபொழுது இவன் இப்படி அனாவசியமாய் வருத்தம் கொள்வதேன். சலனமான மதிய வேளையில் கண்மாய் கரையில் அமர்ந்திருந்த மணிகண்டன் புரோட்டா கடைக்கு சாப்பிடப் போயிருந்தான். பஸ்டாப்பை அடுத்ததாய் அமைந்திருந்த வெளி யில் கூரை


துப்பு

 

 தமிழ்நாடு கமர்சியல் பேங்க் கிளை, சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ”, வங்கி கிளையின் மேனேஜர் ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார். “யார்ன்னு தெரியலே சார், நான் இப்போதான் பார்க்கிறேன், எதாவது கஸ்டமரா இருக்கும். அக்கௌன்ட் ஓபன் பண்ண வந்திருப்பான்”, அசிரத்தையாக நழுவினார் அக்கௌண்டன்ட். இந்த மேனேஜருக்கு வேறே வேலையே இல்லை. எல்லாத்துக்கும் சந்தேகப் பட்டுக்கிட்டு. அடுத்த நாளும், அதே


விடாமுயற்சி

 

 ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம். பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது. மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை. எறும்பை பார்த்து பறவை


எங்கே என் குழந்தைகள்?

 

 “டீச்சர் கவலையா இருகிங்களா?” “அதெல்லாம் ஒண்ணுமில்லேமா பணியில இருக்குறவுங்க ஐம்பத்தெட்டு வயசானா பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியது தானே. இதில் கவலைப்பட என்ன இருக்கு?” “இருந்தாலும் உங்களோட பிரிவைத் தாங்கிக்கறது எங்களுக்கு ரொம்பக் கஷ்டம் தான் டீச்சர்.” உண்மை தான். கற்பகம் டீச்சர் ஒரு சராசரி ஆசிரியை இல்லை. பள்ளி துவங்க ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுவார். வகுப்பறைகள் தூய்மையாக இருக்கின்றனவா என்று பார்வையிடுவார். மாணவர்களை குழுக்களாக அமர வைத்துப் படிக்க சொல்வார்.


பொம்மைகள்

 

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது என்பதைத் தீர்மானித்தபின், முகுந்த்துடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் மிகப் பெரிய பொக்கிஷமாகப் பட்டது கமலாவுக்கு. கணேஷ்-கமலாவின் அருந்தவப் புதல்வன் முகுந்த் என்றால் ரொம்பவே சரியாக இருக்கும். திருமணமாகி வெகு நாட்களுக்குப் பிறகு முகுந்த் பிறந்ததில், கமலாவை விடக் கணேஷுக்குத்தான் அதீத சந்தோஷம். மூச்சுக்கு முந்நூறு தடவை முகுந்த் முகுந்த் என்று அவன் மீது இருவரும் அளவற்ற