கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 7, 2013

15 கதைகள் கிடைத்துள்ளன.

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!

 

 இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி விட்டதாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத்தான் விடிகிறது. வாரத்தின் எல்லா நாட்களுக்கென்றும் ஒரு மனநிலை இருக்கிறது. திங்கள்கிழமைகள் கொஞ்சம் ஆசுவாசமாக விடியும். அன்று அவளது வேலைகள் அத்தனை சிரமமில்லை. செவ்வாய்க்கிழமை ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும், புதன் கிழமைகளில் பெரும்பாலும் முந்தைய நாளின் இரவே எதையாவது செய்து வைத்துக் கொண்டு அதை எடுத்துக் கொண்டு


நான் புகழேந்தி பேசுகிறேன்

 

 நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில் காற்றைப் போல் உலா வருவது சுகமாக இருக்கிறது. கீழே என் ஸ்தூல உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. “”நேற்று ராத்திரிகூட நல்லா இருந்தியே. நல்லாத்தானே பேசிட்டிருந்தே. நாளை உன் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரைப் பார்த்து அதற்கு பணம் கேட்கணும்னுகூட சொல்லிட்டிருந்தியே. வழக்கம் போல காபி போட்டு எடுத்துட்டு வந்து எழுப்பினால் எழுந்திருக்கவில்லையே” மனைவியின் புலம்பல். உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது.


பொறுக்க ஒரு ‘தம்’

 

 “ரகு நான் புகைக்கிறதை நிறுத்தப் போறேன்டா..” –என்றேன். “”நிறுத்திக்கோ,. அதுக்கென்ன இப்ப. பெரிய கம்பசூத்திரமா அது. இடம் மழமழன்னு இருக்கணும், ஃபேன் சுத்தாம பார்த்துக்கணும்,. இல்லேன்னா காத்துல சாய்ஞ்சிடும்”. “”அடத்தூ ரொம்பத்தான்யா. எதையும் சொந்தமா சொல்லாதே. காப்பிஸ்ட்டு. நான் சிகரெட் புடிக்கிறதை நிறுத்தப் போறேன், நிறுத்தப் போறேன்”. “”அப்பிடி போடு. இப்படியே நூறு தடவை சொல்லு.இந்த வார்த்தைக்கு உங்கிட்ட எதனா அர்த்தம் இருக்காய்யா. எனக்குத் தெரிஞ்சே இது பத்தாவதோ, பதினொண்ணாவதோ தடவை..” “”இல்லய்யா, இந்த தடவைதான் ஃபைனல்”.


மியாவ்

 

 மியாவ் மியாவ் பூனைக் குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான் விக்னேஷ். “”டேய் விக்னேஷ் இப்பவே சொல்லிட்டேன், நாம புதுசா பார்க்குற வீட்டுக்கு, உன்னோடு பூனை குட்டி வரக்கூடாது. என்ன புரிஞ்சதா?” கணேஷின் கேள்விக்கு மௌனத்தைப் பதிலாக்கினான் விக்னேஷ். “”கஸ்தூரி உன் புள்ளை கிட்ட இப்பவே சொல்லி வை” “”ஆமாம் நான் சொன்னா அப்படியே அப்பாவும் புள்ளையும் கேட்டுடுவீங்க” முணுமுணுத்த கஸ்தூரி, “”என்னங்க வாடகைக்கு வீடு பார்க்க, புரோக்கரோட இன்னிக்குத்தானே போறீங்க?” என்றாள் சப்தமாக. * * * “”சார் அம்சமான


காற்றின் விதைகள்…

 

 வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச் சொன்னார்கள். மொபெட்டில் சென்றபோது அவ்வீட்டை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. மினி வேன் ஒன்றில் தட்டுமுட்டுச் சாமான்களுக்கு சிகரமாக நாற்காலி ஒன்று மல்லாக்கவைத்து அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அழைக்க வருவதை கவனித்துவிட்ட சாலம்மா வேகமாக வந்து, “”இன்னிக்கு வர்றத்துக்கு ஆவுறதில்லை. இங்க சொல்பா கெலசா (கொஞ்சம் வேலை) இருக்கு” என்றாள் கன்னடம் பிணைந்த தமிழில். “”ஏன்? என்னாச்சு?” என்றபோது,