கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 7, 2013

15 கதைகள் கிடைத்துள்ளன.

பிரி கூலி

 

 “”யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி. “”ஆமா. நீ வேற, நானே இருக்குற ரெண்டு வெத்தலையை இணுக்கு இணுக்கா ஆஞ்சி பேருக்கு போட்டுக்குறேன்” என்றாள் சகுந்தலை. “”குடுக்கா, ராத்திலேர்ந்து ரவ வெத்தலை போடல வாயில, நாக்கு நமநமன்னுது; பல்ல கடுக்குது; பயித்தியமே புடிச்சுபுடும் போலருக்கு” “”இதென்னாடி வம்பாருக்கு, உட்டா அழுதுடுவ போலருக்கு” என்று தன் பொட்டலத்தைப் பிரித்து, வாடி இருந்த ஒரு வெற்றிலையை எடுத்து பாதி கிழித்து அவளிடம் நீட்டினாள்.


தோற்றப் பிழை

 

 ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை. பைக்கை நிறுத்தினான். காலூன்றினான். விநாடிகள் டிஜிட்டல் எண்களாய் கரைந்து கொண்டிருந்தன. பத்து விநாடிகளுக்குள் வாகனங்கள் நெருக்கமாக வந்து நின்று காத்திருக்க ஆரம்பித்தன. மக்கள் தொகை பெருக்கம்போல் வாகனங்களும் சரிவிகிதத்தில் பெருகிவிட்டன போலும், என எண்ணிக்கொண்டான். அப்போது- அவனுக்கு மிக அருகில் அவன் தோளைத் தொட்டு, “”அய்யா, பசிக்குது ஏதாவது காசு குடுங்கய்யா….” என்ற குரல் கேட்டது.


எதிர்வினை

 

 காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் , ராவுத்தர் தன் கடை வாசலுக்குப் போய்விட்டிருந்தார். கடைவீதியில்தான் என் வீடு. வீட்டுக்கு முன்புறம்தான் ராவுத்தரின் வாடகைச் சைக்கிள் கடை. “”பெரிய பள்ளிக்கூடம் வரைக்கும் போய்ட்டு வரலாமா?” என்று கேட்டார் ராவுத்தர். “”இந்தக் கிழ வயசில் நமக்கென்ன பள்ளிக்கூடத்தில் வேலை?” என்றேன். “”நீ வேணும்னா கிழமா இரு. நான் இருக்கமாட்டேன்” என்றவராய், ராவுத்தர் கடையைத் திறந்தார். நான்,


ஒன்பது, எட்டு, எட்டு…

 

 சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப் போன தீபம் போல அந்தப் பகல் பொழுது மேகங்கள் சூழ்ந்ததால் இருண்டிருந்தது. அவள் வீட்டு வேலைக்காக இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. “”நான் வந்து இருபது நாளாச்சு.. ஒரு மாசமாயிடுச்சு.. ஊரு பண்டிகைக்கு மூணு மாசமிருக்கு..”- வந்த புதிதில் தேவி இப்படிக் கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தாள். இப்போது அப்படி நினைப்பதை நிறுத்திவிட்டாள்.


ஏன் கலவரம்?

 

 “வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி விட்டோமே’ என்று தன்னையே நொந்து கொண்டான். 7.30 மணிக்கு சென்னையில் அவன் பணிபுரியும் புறநகர் மருத்துவமனையின் அவுட் பேஷண்ட் பகுதியில் நோயாளிகளைப் பார்க்க வேண்டும். அவசரமாய்ப் பிரஷ் செய்து விட்டு காபிக்காக டைனிங் ஹாலுக்குச் சென்றவன், “”என்ன சுமோ ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பாமல் விட்டு விட்டாயே? லேட் ஆயிடுச்சி பார். இன்னிக்கு எக்சர்ûஸக்கு ஜூட்”