கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 6, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

பத்ம வியூகம்

 

 ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. மேலும், நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர். அதிலும் அந்தத் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது குழந்தைகளும் பெண்களும்தான். இப்படி ஒரு தீவிரமான தாக்குதலை, சற்றும் எதிர்பார்க்காததால், இந்த முறை, அரசு இயந்திரங்கள் எல்லாம் ஆடிப் போயிருந்தன. தொலைக்காட்சி செய்திகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாலு பேரும் கிட்டத்தட்ட ஒரே ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில்


தூண்டிலில் சிக்கிய மீன்கள்

 

 தங்கமணி : வயது 61 தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை. “என்னங்க! இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே? வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா?” – மனைவியின் அலம்பல். கொஞ்ச நாளாக, தினமும் காலையில் தங்கமணி பேப்பர் படிக்க உட்காரும்போது. “கவலைப் படாதே வனஜா. பாக்கலாம், என் பி. எப் பணத்தை வெச்சு, இந்த வீட்டை அடமானம் வெச்சு பெண்களுக்கு கல்யாணம்