கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 4, 2013

8 கதைகள் கிடைத்துள்ளன.

அனு அப்படித்தான்!

 

 கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி ‘விர்’ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா சாலையின் மையத்திலுள்ள தன் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ‘லிஃப்டுக்கு’ ஓடிய கோபிக்கு ‘சே!’ என்றிருந்தது. ‘என்ன மனைவி, என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது?’ ஒரு நாளைப் போல தினமும் அலுவலகத்திற்கு ‘லேட்டாகப் போனால் காலையிலேயே ‘மூட்’ கெட்டு விடுகிறது. எல்லாம் அனுவால் வருவதுதான். நேரத்திற்குக் கிளம்பாமல் அனு தாமதப்படுத்துவதால் தினமும் லேட்! டென்ஷன்! இந்த அழகில்


ராஜேஷின் கல்யாணம்

 

 மோகன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆகிறது. எட்டு வருடங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பொறியியல் படிப்பு முடித்து விட்டு அமெரிக்கா சென்றவன், வருடத்திற்கு ஒரு முறை, மதுரையில் வசிக்கும் தன் பெற்றோரைப் பார்க்க வருவான். எப்போது வந்தாலும், இந்தியாவில் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு அமெரிக்கா திரும்பிவிடுவான். இந்த முறை ஒரு மாதம் இருந்துவிட்டு போகலாம் என்று எண்ணியிருந்தான்.


முடிவு

 

 ரவி வேலையை முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போது, தூங்கிக்கொண்டிருந்த தன் 8 வயது மகன் ராஜாவையும், 5 வயது மகள் மீனாவையும் பார்த்தபடி எதையோ யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். ரவி உள்ளே நுழையும் சத்தத்தைக்கேட்டு அவனுடைய மனைவி சீதா எழுந்து, சமையலறைக்குச் சென்றாள். அவனுக்கு சாப்பாடு எடுத்து தரையில் வைத்தாள். புளிக்குழம்பும், ரசமும் தான் அன்றைய சமையல். வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிடுவது ரவியின் வழக்கம். அன்றும்


மெமரி கார்ட்

 

 விமல் ஸ்போர்ட்ஸ் என்றால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அத்துப்படி. அங்கு எல்லா வகையான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். இரண்டு கிரிக்கெட் பேட்டும், ஐந்து டென்னிஸ் பந்துகளும் வாங்குவதற்கு அந்த கடைக்குச் சென்றனர் திலீப்பும், கிரியும். “கிரிக்கெட் பேட், டென்னிஸ் பால் வேணும்” என்று அந்த கடையில் வேலை பார்ப்பவரிடம் சொன்னான் திலீப். “எந்த ரேட்ல வேணும் தம்பி?” என்றார் அந்த கடைக்காரர். “ஒரு முன்னூறு, நானூறு ரேஞ்சுல காமிங்க அண்ணா” என்றான் திலீப். கடைக்காரர் இவர்களிடம்


வெட்கம் – (கெட்ட) கதை

 

 கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது. தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது. கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள். ‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான். ‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த