கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 3, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்வு புலப்பட்டபோது….

 

 ‘பிரபல நடிகன் ‘ஆக்ஷன் ஆறுமுகம்’ ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான். அவன் கூடவே உள்ளே வந்த ரசிகர் மன்றத் தலைவனும் அவனுடைய பால்ய நண்பனுமான சண்முகம் பக்கத்தில் வந்து அமர்ந்தான். சடாரென்று ‘மைக்’ இப்போது மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் கட்சிகளில் ஒன்றான ‘ஜனமித்ர’ கட்சிப் பிரமுகர் கிஷோரின் முகத்துக்கெதிரே நீட்டப்படுகிறது. “சொல்லுங்க! சென்னையில் ‘பூர்ணசந்திரன்’ கட்சிப் பிரமுகர் சின்னதம்பி, ’33 சதவிகிதம் மகளிர்


மனிதர்கள் பலவிதம்

 

 ‘கிளி ஆன்ட்டீ வீடு’ எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில் இருக்கும் பேசும் கிளிகள், மைனாக்கள், வகை வகையான வண்ணப்பறவைகளைப் போலக் குரல் கொடுத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆன்ட்டீ பறவைகளை மிக அன்பாகப் பராமரிப்பார்கள். ஏதோ மனிதர்களிடம் பேசுவதைப் போல பறவைகளுக்கெதிரே நின்று பேசி தீனி போடுவார்கள். கிளி கூண்டுக்கெதிரே ஒலிப்பெருக்கி வைத்து வீட்டுக்குள்ளேயிருந்து ரேடியோ, டேப்ரெகார்டரில் பாட்டுப் போட்டு விடுவார்கள். தானும் ‘கொஞ்சும் மைனாக்களே!’, ‘பறவைகள் பலவிதம்’


மனம் ஒரு குரங்கு!

 

 உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும் ஒரு சின்ன தப்புக்காக? வார்த்தீங்களா அது? நெருப்புத் துண்டங்களா இல்லே எடுத்து வீசினாரு? இன்னா சொன்னாரு? “ஸ்பானரு புடிக்கத் தெரியாத பயலுவளெல்லாம் எதுக்குடா பேண்ட்டை மாட்டிக்கினு வேலைக்கு வர்றீங்க?” அத்தோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லையே! “எந்த எந்த ப்ளட்பாரத்திலேயோ கெடந்த பொறம்போக்குப் பசங்களை வேலைக்கு வச்சிகிட்டேன் பாரு! எம்புத்தியத்தான் எதாலயாச்சும் அடிச்சிக்கணும்னு” சொன்னாரே! அதை நெனைக்கிறப்பவே வரதனுக்கு


பழக்கம்

 

 கிழக்கு கடற்கரை சாலை. நேரம் பகல் ஒரு மணி. சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த குமாரை வழிமறித்து நின்றது ஒரு கார். கார் ஒட்டுனரைப் பார்த்து அவனை திட்டுவதைப்போல் கையசைத்துவிட்டு தன் வழியில் சென்றான் குமார். சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே கார் குமாரை வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கி, குமார் முன்னே வந்து நின்றான் ஒருவன். “எப்படி இருக்க குமார்? என்ன ஞாபகம் இருக்கா?” என்றான் அவன். “டேய், ரவிதான நீ? எப்படிடா இருக்க?


மார்கோனி

 

 வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும், கோபாலும். இருவரும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மாடசாமியின் மனைவி மீனாவும், கோபாலின் மனைவி ராஜாத்தியும் தினமும் தங்கள் கணவர்களுக்கு மதிய உணவை அவர்களுடைய வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம். “ஏங்க, இப்ப எல்லாம் மத்தியானத்துல வெயில் அதிகமா இருக்குல்ல?” என்று பேச்சை ஆரம்பித்தாள் மீனா. “ஆமா, நீ வீட்டுல