கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2013

65 கதைகள் கிடைத்துள்ளன.

பிடித்த நாளில் பெய்த மழைகள்

 

 படித்து முடித்த பின் வேலை தேட வேண்டிய சூழ் நிலை கட்டாயம் அனைவருக்கும் வரும். அது எனக்கும் வந்தது, நானும் நினைத்தேன் ஆனால் இப்போது வேண்டாம் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன். காரணம் படித்த படிப்பில் வேலைகிடப்பது சுலபமாக இல்லை அது போக எழுத்தாளனாவது என்றும், சவுண்ட் இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றும் வெவ்வேறு எண்ணங்கள் எனக்குள் இருந்தன. அப்பாவின் பேச்சை கேட்டு அரசு பணிக்கான தேர்வுக்கு முயற்சி செய்து


சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடும்

 

 சத்தம் கேட்டு அவன் வெளியே வந்து பார்த்த போது அந்தப்பெண் நின்றிருந்தாள். நடுத்தர வயது மதிக்கத்தகுந்த அவளது முகத்தில் இருந்ததெல்லாம் அனுதாபத்தை பெற முயற்சிக்கும் பாவனைகள். குட்டையாக ஒரு புறம் சாய்ந்திருந்த மல்லிகை மரத்திலிருந்த பூவொன்று அவள் கையில் இருந்தது.முற்றம் என்று சொல்ல முடியாத அதைவிடக் குறுகிய இடத்தில்; கவனமின்றி சுற்றிய புடவையும்,சீப்புப்படாத முடியமைப்பும், தோலில் தொங்கிய சீத்தைப்பையுடனும் ஒரு பக்கம் ஒருக்களித்து நின்றிருந்த அவளது கோலம் ஒரு ஓவியனின் கண்களில் படாமல் போனது வருந்நத்தக்கது தான்.


எங்கே நிம்மதி?

 

 சென்னைக்கு 50 கி.மீ தூரத்தில் கோதண்டராம புரம். பெரிய ஊர். ஊரின் கோடியில் ராமர் கோயில். கோவிலை ஒட்டி ஒரு அரச மரம். மரத்தை சுற்றி கல் மேடை. மேடைக்கு கொஞ்ச தூரத்தில் குளம். சில நாளாக அந்த அரச மரத்து நிழலில், மேடையில் ஒரு பெரியவர். எதையோ இழந்தது போல் தோற்றம். கொஞ்சம் வெறித்த பார்வை. வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளை தாடி, நெற்றியில் திருநீறு, நடுவில் சந்தனம். நல்ல படித்த களை. பண்பட்ட


கஸ்டமர் சேவை

 

 அன்று நான் அலுவலகத்திற்கு லேட். நான்தான் அங்கு தலைமை அதிகாரி. நேற்றும் அதற்கு முன் தினமும் 2 நாட்கள் அலுவலக வேலையாக வெளியூர் போகவேண்டிய சூழ்நிலை. நான் இல்லையென்றால் என்ன கூத்தடிக்கிறர்களோ ஆபீசில். முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது. நேற்றுதான் நான் ஹைதராபதிலிருந்து வந்தேன். அங்கு மேலாலர்களுக்காக ஒரு வார பணிப் பட்டறையில் “வாடிக்கையாளர் சேவை” பற்றிய தலைப்பில் எனது பேச்சு. என் உரை முடிந்தவுடன் ஒரே கைதட்டல். “பேஷ்! பேஷ்! ரொம்பப் பிரமாதம்”


சந்தேகம்

 

 சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த எட்டு வருடங்களாக இங்குதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன், லைப்ரரியனாக. வெளியே வரும்போது யாரோ “லஷ்மி” என்று கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பினேன். என்னை இல்லை. வேறு யாரையோ? நேரம் பார்த்து, யாழினி, எனது உதவியாளினி, 5.00 மணிக்கு வேலை கொடுத்து விட்டாள். ஏதோ அவசரமாம். முடிக்க இவ்வளவு நேரம். அடிக்க வேண்டும் அவளை. இனிமேல்தான் ஆட்டோ பிடித்து,