Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2013

67 கதைகள் கிடைத்துள்ளன.

பிடி

 

 அந்த பஜாஜ் ஸ்கூட்டர் ஒரு நாளும் அந்த பிரமாண்ட ஸ்கூல் கேட் முன்னால் நின்றதில்லை. மாணவர்களின் குதூகலம், ஆசிரியப் பணிவு, பெற்றோர்களின் அலைச்சல், விசாரிப்புகள் என எல்லாவற்றையும் மீறி அதன் புறப்பாடும், வருகையும், சமீபித்தலும் கனகராஜின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும். அவன் காதுகள் புற உலகச் சத்தத்தைத் தவிர்த்து பஜாஜ் ஸ்கூட்டரின் சத்தத்திற்கு மட்டுமே காத்திருக்கும். அவர் கையிலிருந்து அணைக்காத எஞ்ஜின் சத்தத்துடன் ஒரு குழந்தையைக் கைமாற்றுவது மாதிரி ஸ்கூட்டரைக் கனகராஜின் கைகளுக்கு மாற்றி விடுவார். ஸ்கூட்டரின்


கால்

 

 தான் யாருமற்று தனித்திருப்பதை திடீரென உணரமுடிந்தது. நிதானமாக எழுந்து மேல்மாடி அறையிலிருந்து வெளியேறி வராண்டாவிற்கு வந்து நின்று எதிரில் வியாபித்திருந்த மாமரத்தைப் பார்த்தான். கொத்து கொத்தாய் காய்கள் நிறைந்திருந்தன. ஆறேழு அணில்கள் இவை தங்களுக்கானவை என்ற உரிமையுடன் அக்கிளைகளில் இங்குமங்கும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. வெகு நாட்களாக கவனிக்காமலிருந்த அம்மரப் பருண்மை அவனை ஆச்சரியப்படுத்தியது. மேல்மாடி அறைகளிலும், கீழ் அலுவலகத்திலும் குறைந்தது முப்பது பேர் பணியாற்றிக் கொண்டிருப்பினும் ஒரு சத்தமும் இன்றி அணில்களின் சத்தத்தை இன்றைக்கு மட்டும்


நள்ளிரவின் நடனங்கள்

 

 இந்த ஃபிரெண்டு தொல்லை தாங்க முடியலை. டிக்கட் இல்லை, ஃபுல்.

ஆஃபீஸ்ல லீவ் வேற இல்லை.

உடம்பு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.

நெறைய வேலை அப்படியே கிடக்கு. என்னையே ஏன் புடிச்சி எல்லாரும் தொல்லை பண்றாங்கன்னு தெரியலை.

அங்க வேற ஒரே குளிராம், மழையாம்… வெளியில தலை காட்ட முடியாதாம், காட்டேஜஸ் ஹவுஸ்ஃபுல்லாம்.

என்னதான் செலவு எல்லாம் அவன் பண்றதா சொன்னாலும் நம்ம வேலைய யாரு செய்வா?

ஆனாலும் வேற வழியே இல்லை. ரொம்ப வற்புறுத்துறான், கடுப்பா இருக்கு. இவனுக்காக கோவா போய்தான் தொலையணும்


தாய்வீட்டு சீதனம் !

 

 நீண்ட நேரமாக சுவற்றில் தலைகீழாக தொங்கிக்கொண்டிந்த மின்விசிறியை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அசோக் ஒரு வழியாக தன் குழப்பங்களுக்கு தெளிவு கண்டவனைப்போல தன் இருக்கையில் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனது முகம் வியர்வையால் குளிர்ந்திருந்தது. அவனது பிரதான மேசையின் வலது புறத்தில் நின்றுக்கொண்டிருந்த சதுர வடிவ கடிகாரத்தில் மணி நான்கை தொட்டிருந்தது. வேகமாக இருக்கையிலிருந்து எழுந்த அசோக் தன் சட்டை பித்தான்களை சரி செய்துகொண்டான். அந்த அலுவலகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த அவனது அறையிலிருந்து வெளியேறி வரிசையாக


எச்சில் ருசி

 

 எச்சில் கரை சிறுசிறு திட்டுகளாக காய்ந்துக்கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திருந்தாள் கோணி கிழவி. அவள் உடம்பில் ஒரு அழுக்கடர்ந்த பழஞ்சீலை சுற்றப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக அவளது ரத்தம் உறைந்த வற்றிய உடலை அந்த சீலை போர்த்தியிருந்தது. அந்த குடிகாரப்பயல் செல்லமுத்துதான் சீக்குண்டு இறந்துபோன தனது அம்மாவின் சீலை ஒன்றை கோணி கிழவிக்குகொண்டு வந்து கொடுத்தான். சீலையை கையில் வாங்கியதும் காய்ந்துபோன மாந்தோளை போன்ற தனது மூக்கு துவாரத்தில் அந்த சீலையை