Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 24, 2013

11 கதைகள் கிடைத்துள்ளன.

வராமற்போனதும் வராமற்போனவர்களும்

 

 அம்மா படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவள் இப்படிக் கிடந்து ஏழெட்டு நாட்களாகிறது. முன்னர் கொஞ்சம் அங்குமிங்கும் நடந்து திரியக்கூடியதாயிருந்தது. விழுந்துவிடுவேனோ என்ற பயத்துடன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடப்பாள். இப்போது அதுவும் முடியவில்லை. ஊன்றுகோல் கட்டிலின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்செயலாக நடக்க முடிந்தால் அது உதவக்கூடும் என அம்மா நினைத்திருப்பாளோ என்னவோ! முற்றத்து மரத்திலிருந்து காகமொன்று கத்துகிற சத்தம் அம்மாவுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கலைத்துவிடவேண்டும். அது எந்தத் திசையிலிருந்து கத்துகிறதென்று தெரியவில்லை. காகம் இருந்து கத்துகிற திசையைப்பொறுத்து,


பார்வைகள் பலவிதம் !

 

 காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். 275 A பஸ். அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை, ஜெமினி, சத்யம் தியேட்டர் வழியாக. அரசாங்க சொகுகு பேருந்து. வசதி குறைவு. ஆனால் டிக்கெட் காசு அதிகம். அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஆயிற்று, ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர வண்டி நிரம்பி விட்டது. பேருந்து கிளம்பியது. முதல் நிறுத்தம். குபேரன் பிளாட்ஸ்.


வலி

 

 அப்போதுதான் நடக்கத் துவங்கியது போல் முடியும் போதும் உற்சாகத்திலிருந்தார்கள். ஒரு வெப்பால மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த போதும் நீண்ட நடையின் களைப்பேதும் இல்லை. இருவருமே நெடுநெடுவென வளர்ந்து, ஒல்லியாக இருந்தார்கள். தொழில் அவர்களை அப்படி இருக்கச் சொல்லி எச்சரித்திருந்தது. ராமன் எதிர் புதரின் அசைவையே பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளே அசைவது எதுவென தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வமுற்றிருந்தான். இரண்டாமவன் கையிலிருந்த கருங்கல்லை உருட்டிக்கொண்டு அதையேப்பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் இடைவெளியிலும் கூட இருள் அப்பி ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாதபடி


பிடி

 

 அந்த பஜாஜ் ஸ்கூட்டர் ஒரு நாளும் அந்த பிரமாண்ட ஸ்கூல் கேட் முன்னால் நின்றதில்லை. மாணவர்களின் குதூகலம், ஆசிரியப் பணிவு, பெற்றோர்களின் அலைச்சல், விசாரிப்புகள் என எல்லாவற்றையும் மீறி அதன் புறப்பாடும், வருகையும், சமீபித்தலும் கனகராஜின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும். அவன் காதுகள் புற உலகச் சத்தத்தைத் தவிர்த்து பஜாஜ் ஸ்கூட்டரின் சத்தத்திற்கு மட்டுமே காத்திருக்கும். அவர் கையிலிருந்து அணைக்காத எஞ்ஜின் சத்தத்துடன் ஒரு குழந்தையைக் கைமாற்றுவது மாதிரி ஸ்கூட்டரைக் கனகராஜின் கைகளுக்கு மாற்றி விடுவார். ஸ்கூட்டரின்


கால்

 

 தான் யாருமற்று தனித்திருப்பதை திடீரென உணரமுடிந்தது. நிதானமாக எழுந்து மேல்மாடி அறையிலிருந்து வெளியேறி வராண்டாவிற்கு வந்து நின்று எதிரில் வியாபித்திருந்த மாமரத்தைப் பார்த்தான். கொத்து கொத்தாய் காய்கள் நிறைந்திருந்தன. ஆறேழு அணில்கள் இவை தங்களுக்கானவை என்ற உரிமையுடன் அக்கிளைகளில் இங்குமங்கும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. வெகு நாட்களாக கவனிக்காமலிருந்த அம்மரப் பருண்மை அவனை ஆச்சரியப்படுத்தியது. மேல்மாடி அறைகளிலும், கீழ் அலுவலகத்திலும் குறைந்தது முப்பது பேர் பணியாற்றிக் கொண்டிருப்பினும் ஒரு சத்தமும் இன்றி அணில்களின் சத்தத்தை இன்றைக்கு மட்டும்


நள்ளிரவின் நடனங்கள்

 

 இந்த ஃபிரெண்டு தொல்லை தாங்க முடியலை. டிக்கட் இல்லை, ஃபுல்.

ஆஃபீஸ்ல லீவ் வேற இல்லை.

உடம்பு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.

நெறைய வேலை அப்படியே கிடக்கு. என்னையே ஏன் புடிச்சி எல்லாரும் தொல்லை பண்றாங்கன்னு தெரியலை.

அங்க வேற ஒரே குளிராம், மழையாம்… வெளியில தலை காட்ட முடியாதாம், காட்டேஜஸ் ஹவுஸ்ஃபுல்லாம்.

என்னதான் செலவு எல்லாம் அவன் பண்றதா சொன்னாலும் நம்ம வேலைய யாரு செய்வா?

ஆனாலும் வேற வழியே இல்லை. ரொம்ப வற்புறுத்துறான், கடுப்பா இருக்கு. இவனுக்காக கோவா போய்தான் தொலையணும்


தாய்வீட்டு சீதனம் !

 

 நீண்ட நேரமாக சுவற்றில் தலைகீழாக தொங்கிக்கொண்டிந்த மின்விசிறியை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அசோக் ஒரு வழியாக தன் குழப்பங்களுக்கு தெளிவு கண்டவனைப்போல தன் இருக்கையில் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனது முகம் வியர்வையால் குளிர்ந்திருந்தது. அவனது பிரதான மேசையின் வலது புறத்தில் நின்றுக்கொண்டிருந்த சதுர வடிவ கடிகாரத்தில் மணி நான்கை தொட்டிருந்தது. வேகமாக இருக்கையிலிருந்து எழுந்த அசோக் தன் சட்டை பித்தான்களை சரி செய்துகொண்டான். அந்த அலுவலகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த அவனது அறையிலிருந்து வெளியேறி வரிசையாக


எச்சில் ருசி

 

 எச்சில் கரை சிறுசிறு திட்டுகளாக காய்ந்துக்கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திருந்தாள் கோணி கிழவி. அவள் உடம்பில் ஒரு அழுக்கடர்ந்த பழஞ்சீலை சுற்றப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக அவளது ரத்தம் உறைந்த வற்றிய உடலை அந்த சீலை போர்த்தியிருந்தது. அந்த குடிகாரப்பயல் செல்லமுத்துதான் சீக்குண்டு இறந்துபோன தனது அம்மாவின் சீலை ஒன்றை கோணி கிழவிக்குகொண்டு வந்து கொடுத்தான். சீலையை கையில் வாங்கியதும் காய்ந்துபோன மாந்தோளை போன்ற தனது மூக்கு துவாரத்தில் அந்த சீலையை


நிலையில்லா மீன்கள்

 

 அடர் மஞ்சள் பூக்களை சாலை எங்கும் யாரோ அள்ளி தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள் போல. வளைவுகள் அற்ற நீண்ட அந்த சாலை சாலையின் இருமருங்கிலும் நின்ற‌கொன்றை மரத்தில் இருந்து விழுந்திருந்த பூக்களை பார்க்கும் போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. ஒரு கையால் ஸ்டியிரிங்கை பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் அவளின் கரம் பற்றி இறுக்கினேன். திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை ஒன்றை வீசினாள். மஞ்சள் பூக்களை அள்ளி முகத்தில் வீசியதை போன்ற உணர்வு. அதிக வாகனங்கள்


ஆண்களும் பூதமும்

 

 ஓர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவனாகவும், பிள்ளைக்கு அப்பாவாகவும் இருக்கிறான். சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்’டிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப் பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள்