கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 12, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

தாயின் அரவணைப்பு

 

 செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது. அந்த பெண்கள் விடுதியில் இவள் ஒருத்திக்குதான் திங்கள் கிழமை வார விடுமுறை. ஒவ்வொரு வாரமும் இப்படி மற்றவர்கள் எல்லாம் வேலைக்கு போயிருக்கும் போது இவள் மட்டும் விடுதியில் தனிமையில் உட்கார்ந்து கொண்டு பொழுதைப் போக்க வேண்டும். சலிப்பாய் இருந்தது. அறையில் உடன் தங்கியிருக்கும் தோழி இன்னும் வேலையிலிருந்து திரும்ப வில்லை. திடீரென்று குழந்தையின் அழுகுரல் போன்ற ஒரு


அவள் பணக்காரி…!

 

 “ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்.. எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான். ஷைலு புன்னகையை உதிர்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். டிஸைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தாள். “ம்.. ரொட்டி பனீர், அப்புறம் ரவா மசாலா..” சொல்லிவிட்டு காத்திருந்த வேளையில் அவர்கள் மேசையில் காலியாக இருந்த இரண்டு நாற்காலிகளில் அந்த தம்பதிகள் உட்கார்ந்தனர். அந்த ஆள் மக்கலாக பழுப்பேறிய சட்டையுடன், அந்த பெண் ஒரளவு பவுடர் பூசி தலையில் மல்லிகை வைத்து கொண்டு புது


மனசாட்சி..!

 

 “ மது.. என்னாச்சு… நேத்துலர்ந்து பார்க்கிறேன் ஒரு மாதிரி டல்லா இருக்கே.. நீ டூர் போயிட்டு வந்ததிலர்ந்தே கலகலப்பா இல்ல… “ மதுமிதாவின் அம்மா கேட்க, “ அம்மா… நம்ம பாட்டி உயிரோட இருந்திருந்தா.. நீ நல்லா பார்த்திட்டு இருப்பே இல்ல…?” அவள் கேள்வியில் ஒரு நிமிஷம் ஆடிப்போன விஜயா…. “ இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம இதை கேட்கிற….” “ அம்மா ஏதோ ஒரு ஃபிலீங்க்ஸ் அட்டாக்…. அதான் கேட்டேன்… என்னையும் , அப்பாவையும் இவ்வளவு நேசிக்கிற


தனிக்குடித்தனம்…

 

 ” என்னங்க நீங்க பாட்டுக்கு ஆபிஸ் போறதும் வரதுமா இருக்கிங்க.. நம்ம அருண் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான்.. அவனுக்கு ஒரு கல்யாணமும் பண்ணிட்டா ஒரு பாரம் குறையும்….” அலுவலகத்திலிருந்து வந்த வெங்கடேசன் கைகளில் காபியை கொடுத்து கேட்டாள். “ விஜயா நம்ம பசுபதியோட பெண்ணை பார்க்கலாமா? எம்.எஸ்ஸி மேத்ஸ் முடிச்சிருக்களாம். இப்போதைக்கு தனியார் பள்ளியில வேலை செய்யறாளாம். “ ஆமா.. அந்த ப்யூன் பசுபதியோட பெண்ணையா? உங்களுக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா நம்ம அருண் அவன் ப்ரெண்ட்ஸ்ங்க


இனி எல்லாம் சுகமே..!

 

 “ ஜெய்… எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…” சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…” போனை வைத்தான். அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது… அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக அம்மா அழைத்திருந்தாள். நெருங்கிய சொந்தங்களுக்கு போகாமல் இருக்கவும் முடியவில்லை..போனாலும் அவள் மனம் சங்கடம்படும்படி எதாவது நடந்துவிடும். போனமுறை அப்படிதான் வீட்டிற்கு போயிருந்தபோது அவன் தங்கை குழந்தையை ஆசையாய் வாங்கி சாப்பாடு