Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 10, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

அடைக்கலம்

 

 “ அலமு.. ஒரு டம்ளர் காபி கொண்டு வா.. “ கதிரேசன் குரல் கொடுத்த அடுத்த நிமிடத்தில் வேலைக்காரி சுடச் சுட காபியை வைத்து விட்டு போனாள். காபியை குடித்து கொண்டே தினசரிகளில் ஒரு மணி நேரத்தை ஓட்டினார். ஜானகி ஹாலில் டி.வி பார்த்து கொண்டிருந்தாள். “ ஒரு பெண்ணா இருந்துகிட்டு இப்படி இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வருது திவ்யா…?” சீரியலில் ஒரு பெண் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள் . ஜானகி கண்ணாடியை


நண்பன் என்றொரு புத்தகம்….

 

 “ சபேசன் சார் நீங்கதான் அப்பாவோட நெருங்கிய நண்பர், அப்பா ஏதாவது உங்க கிட்ட சொல்லியிருக்காரா அது விஷயமா பேசனும் நீங்க நாளைக்கு வீட்டுக்கு வர்றிங்களா?” மணிமாறன் போனில் அழைத்திருந்தான். என் நண்பன் போன பிறகு அந்த வீட்டிற்கு போய் ஆறு மாதமாயிற்று. நடேசன் இழப்பு ஒரு கண்ணை இழந்தது போல்தான் இருக்கிறது. அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் அடக்க முடியாமல் துக்கம் பீறிட்டு குலுங்கி குலுங்கி அழுது விடுகிறேன். என் மனைவி வடிவு புலம்புவாள்..” ஆமா


ஆல மரமாய் எழுந்திட ஒரு வேட்கை…!

 

 “ சேகர் வர்ற வெள்ளிக் கிழமை நானும் மாமாவும், புறப்பட்டு சென்னை வர்றோம். மாமாவோட சொந்தக்காரங்க கல்யாணம் அங்க.. அப்படியே ஒரு எட்டு உன்ன பார்த்துட்டு இரண்டு நாள் தங்கிட்டு கிளம்பலாம்னு இருக்கோம். உங்க வீடு குடி போனப்ப எல்லாரோடும் சேர்ந்து வந்துட்டோம்.. அவ்வளவு சீக்கிரம் எங்களால கண்டுபிடிக்க முடியாது.. நாங்க கோயம்பேடு வந்ததும் போன் பண்றோம். நீ ரெடியா இருந்து ஸ்டாப்பிங் வந்ததும் அழைச்சிட்டு போயிடு..” ராமலட்சுமி போன் பண்ணியிருந்தாள். அக்கா வருவது சேகருக்கு சந்தோஷமாய்


வானம் வெளுக்கும்…..

 

 ஒரு பெருமழையின் இடையே பலத்த இடிச்சத்தமும், மின்னலும் வெட்டுவது போல திமு திமுவென்று கீழ்பட்டிக்கு நுழைந்தது ஒரு கூட்டம். “ ஏலேய் மருதா.. வெளியே வாடா.. பொட்டச்சிறுக்கிய ஒழுங்கா வளர்க்க மாட்டியா… பவிசு காட்டி பெரிய வீட்டு புள்ளைய மயக்கத்தான் படிக்க அனுப்புறியா..? ஒழுங்கா மரியாதையா கண்டிச்சு வையி.. இனி அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தோம் அவ்வளவுதான்… இந்த ஏரியாவே இருக்காது…” கூழை குடித்தாலும் யார் வம்புக்கும் போகாத மருதனுக்கு மேல்பட்டி கும்பலின் எச்சரிக்கை வயிற்றை


சொன்னது என்னாச்சு?

 

 பிரவீணா வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த மல்லிகா, “ உன்னை இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுதான வரச்சொன்னேன்… அவங்க வர்ற நேரமாச்சு… நேத்தெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியும் இன்னிக்கு வேணும்னு உன் இஷ்டப்படிதான் வர்றே…?” “ அம்மா நீயா நினைச்சிகிட்டா எப்படி? உனக்காக நான் சீக்கிரமாத்தான் கிளம்பினேன்.. நடுவுல எதோ கட்சி ஊர்வலம்… ட்ராபிக் ஜாம் அப்படி இப்படின்னு பஸ் நகர்ந்து வர்றதுக்குள்ள வழக்கமான டைமாயிடுச்சி…” “ நேரமாச்சின்னா ஆபிசில சொல்ற காரணத்தையே எங்கிட்டயும் சொல்றியா?