கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 8, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

புயலின் மறுபக்கம்.!

 

 பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம். மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள். மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்.., ‘நகரத்தின் இயக்கத்திற்கும்,தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது இந்த


கூரைய பிச்சிகிட்டு …

 

 பொழுது சாய்ந்த நேரம் மதி அறக்க பறக்க ஓடி வந்தான் ,கொலையை கண்டவனைப்போல் தலைதெறிக்க உள்ளே நுழைந்தவன்,அறையினுள் நுழையும்போதே படியில் கால் இடறி சமாளித்து மேலேறினான், ரவியை கண்டதும் சற்று நிதானமாகி ரவியிடம் அந்த விஷயத்தை கூறினான் , கூறும் போதே அவசரத்தில் உளறினான் மதி. அவசரம்,பயம்,வெறி என கலந்த மனநிலையில் கூறினான்.இதுவரை அமைதியாய் இருந்தவன், மதி கூறியதை கேட்டதும் பயந்து போனான் முகமெல்லாம் அதிர்ச்சியில் வெளுத்து வேர்த்துபோயிருந்தது ரவிக்கு ,தீவிரமானான் என்ன செய்வதென்று சிந்திக்க தொடங்கினான்