கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 9, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் மாறும்

 

 தலையணையில் தன் முகம் புதைத்து உறக்கம் வராமல் தவித்தாள் திவ்யா. “ஆனந்த் என்ன சொல்வாரோ நாளைக்கு? என் காதலை ஏதுக்குவரோ?”, என்று. திவ்யா 23-வயது நிரம்பிய அழகும் இளமையும் கொண்டவள். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். ஆனந்த் அவளுடன் அலுவலகத்தில் பணிபுரிபவன். நல்ல நட்புடன் ஆரமித்தது அவர்கள் சந்திப்பு . நாளடைவில் திவ்யாவிற்கு ஆனந்தின் மேல் அன்பு அதிகரித்தது. எப்பொழுதும் ஆனந்த் பற்றியே நினைவு அவளுக்கு. ஆனந்தின் மேல் இருந்த அன்பு காதலாக மாறிவிட்டது என்று புரிந்துகொண்டாள்.


பரிகாரம்

 

 மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பின் அந்த தனியார் பஸ் கோவிலருகே வந்து பெருமூச்சு விட்டு நின்றது. பயணக் களைப்பிலும், காலை சாப்பிட்ட டிபன் செரிக்காமல் பஸ் மலை ஏறும்போது எடுத்த வாந்தியிலும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பஸ்ஸின் குலுக்கலுக்கேற்ப்ப திடுக்கிட்டு எழுந்தார்கள். கணேசன், ரமா தம்பதியரும் எழுந்து குழந்தை வைசாலியைப் பார்த்தால் அவள் தூங்கி எழுந்து கண் விரித்துச் சிரித்தாள். மூன்றே வயதானாலும் இந்த சிரமமான பயணத்தை அவள் சமாளித்த விதம் அவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.


மோதல்

 

 “மேகலா வரவில்லை. எதிர்பார்த்துக் காத்திருந்ததில் முக்கால் மணி நேரம் ஆபீசுக்கு லேட். வீட்டு சாவி எதிர் வீட்டில்.” டீ ப்ரேக்கில் வாய்ஸ் பார்ட்னெர் சஞ்சனா விடம் “எக்ஸ்க்யுஸ் மீ” என்றுவிட்டு கச்சிதமாய் பிரேமிடமிருந்து வந்த டெக்ஸ்ட் மெசேஜை வாசித்தாள் வாணி. இன்னைக்கும் மேகலா லீவா. இந்த வேலைக்காரர்கள் தொந்தரவிலிருந்து என்றுதான் விடுதலையோ என்றிருந்தது வாணிக்கு. அடக்கமான இரண்டு பெட்ரூம் ப்ளாட்; எல்லா வேலைக்கும் மெஷின். இருந்தும் கடந்த வாரம் முழுக்க மேகலா வரவேயில்லை. ஆபிஸ் முடிந்து வீட்டிலும்


யுத்தங்கள் செய்வது…

 

 நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம். நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து


வெப்பம்

 

 இந்த அதிகாலைக் குளிரில் தண்ணீர் காலைத் தொட்டதும் தேகம் ஒருமுறை சிலிர்த்தது. வாய்க்காலில் ஓடிவந்த தண்ணீரை அனுஜன் கால்களால் அலசித் தள்ளிவிட்டான். மரவள்ளிப் பாத்தி தண்ணீரை உறுஞ்சி நனைந்தது. பாத்தியில் தண்ணீர் நிறைந்ததும் மண்வெட்டியால் மறித்துக் கட்டினான். தண்ணீர் உயிருள்ள ஒரு ஜீவனைப்போல மறு பாத்திக்குள் ஊர்ந்து ஓடியது. மண்ணைக் கோலி ஏற்கனவே மூடிய பகுதியிற் போட்டுப் பலப்படுத்தினான். தண்ணீர் உடைப்பெடுத்து ஓடாமல் ஒவ்வொரு பாத்திகளாக மறித்துக் கட்டும் லாவகமெல்லாம் அனுஜனுக்குக் கை வந்த கலை. அவனுக்கு