கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 8, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லதோர் வீணை செய்தே…

 

  பத்து வயது சொல்லலாம் கொடிக்கம்பத்தின் கீழே குப்புறப் படுத்திருந்ததைப்போல் கிடந்த அந்த சிறுமிக்கு. ரெட்டை பின்னல் போட்டிருந்த தலையில் ரத்தம் இன்னும் உறையவில்லை. கால்களில் அங்கங்கே ரத்தம் தோய்ந்திருந்தது. பிஞ்சுக் கைகள் இடம் பெயர்ந்து… ஹாஸ்பிட்டலுக்கு அள்ளிக்கொண்டு போனார்கள். கொஞ்ச நேரத்தில் அந்தப் பள்ளி வெறிச்சோடியது. சாக் பீசால் ஒருத்தன் மார்க் பண்ணிக் கொண்டிருந்தான். ப்ரின்சிபல் ரூம் சாத்தியிருந்தது. ஜன்னல் வழியே போலீஸ் தொப்பி தெர்ிந்தது. எங்கும் நிசப்தம். “லலிதா மிஸ் பாவம். ஸ்கூல் ரூல்ஸ்படி


பிரச்சனை தீர்ந்தது

 

 பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் … பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது போலத்தான் இருக்கிறது. எவ்வளவு நாளாயிற்று வேலனும் முருகனும் எதிரியை ஒழித்து நாட்டைக் காற்க போர் முனை சென்று? நம்பவே முடியவில்லையே! இரண்டே வாரம் தான் ஆகியிருக்கிறதா?! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகந்தான். அப்பப்பா! ஆனால், அவர்கள் வந்ததும், பழைய பிரச்சனை திரும்பி கிளம்பி விடுமே?! பொன்னியின் சிந்தனைகள் பறக்கலாயின. எப்படித்தான் அந்த பிரச்சனையைத் தீர்க்கப் போகிறேனோ?


மிமி

 

 ‘மிமி’ என்றால் ஏதோ ‘ஜிம்மி’ மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். ஏகப்பட்ட வளர்த்தி. சூப்பர் கிளாமர். அவளைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் அப்புறம் என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டீர்கள் என்பதால் அடியேனைப் பற்றிய சில அவசர விவரங்கள்: நான் நம்ப ஊரில் ஐ.ஐ.டியில் படித்து முடித்து, அப்பா அம்மாவுக்கு ஏர்போர்ட்டில் நமஸ்காரம் செய்து H1ல் அமொ¢க்கா வந்து அங்கே இங்கே முட்டி மோதிக்


நம்பிக்கை

 

 அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஒரு இதுவாக இருந்திருக்கிறது. குசு குசுன்னு அவுக இரண்டு பேரைப் பற்றியும் ஊர் பேசும். வாயில வயித்துல என்று சொல்லுவார்களே அப்படி ஆயிப் போச்சு இந்த அக்காளுக்கு. இந்த அண்ணன் வீட்டில் வந்து இந்த அக்காள் பழியே என்று உட்கார்ந்து கொண்டாள். காலையில் பெருமாள் கோயில் மணி அடித்தது. இந்த


மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை

 

 அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். அடக்கமாட்டாத தன் தவிப்பின் காரணமாக மீண்டுமொரு முறை பெரும் குரலெடுத்து அந்த மரணச் செய்தியை அறிவித்தவனுக்கு அதன் பிரதியுத்தரமாக எவரது முகமேனும் அதிர்ச்சியுறுவதைக் காணுமாவல் மிக்க இருந்தது. இனி அற்ப நிமிடங்கள் மட்டுமே தன்னால் காரியமாற்ற முடியுமென்பதால் கிடைத்த கால அவகாசம் சிறிது மட்டிலும் எதையேனும் செய்தாக வேண்டிய அவசரமும் பதட்டமும்மாய்