Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

107 கதைகள் கிடைத்துள்ளன.

விதை

 

 ஆளில்லாத தார் சாலை திரௌபதியின் விரிந்த கூந்தல் போல முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. லக்ஷ்மியின் மனதில் ஆயிரத்தெட்டு குழப்பங்கள். சட்டென மிதுனையும் மைத்ரியையும் அம்மாவிடம் தள்ளிவிட்டு கிளம்பியது தவறோ? இரண்டு வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் முற்றிலுமாய் மாறி இருந்தன. “உன் பிள்ளைகள் நூடுல்ஸையும் பாஸ்தாவையும் தவிர வேறு ஒண்ணையும் தொட மட்டேங்கரதுகள். அரிசி சாதம் விஷமா இருக்கு…மணிக்கு வயதுக்குள்ள போயிட்டா பாத்துக்கறதுல என்ன கஷ்டமிருக்கு லக்ஷ்மிம்மா?” என்று அங்கலாயித்தபடி இருப்பாள் பாவம். யாரையாவது


கள்ளநெருப்பு

 

 “எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்…” டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி கதவுகளை அறைந்து மூடினான். சேரில் அமர்ந்து கால்களை நீட்டி பொத்தானை அமுக்கிவிட்டு ஜன்னலை லேசாய் திறந்து விட்டான். சேர் நீண்டு படுக்கை ஆனது. மெல்ல கண்களை மூடி படுத்துக் கொண்டான். செட்டில் உள்ள சாமான்களை அப்புறப்படுத்தும் சத்தம் மற்றும் ஆட்களின் குரல் கலவையாய் கேட்டது. விலைமதிப்புள்ள சாண்டிலியர் விழுந்ததில் செட்டின் பிரதான தளத்தில் ஏகப்பட்ட நாசம்.


எதிர்ப்பு

 

 பூமி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்திருக்கும் போலும்! எங்கு பார்த்தாலும் புதுமை… வானை முட்டும் கட்டடங்கள் நீளமான தார்சாலையில் நடமாட்டமே காணோம்! தரையில் செல்லும் வாகனங்கள் முதல் விஞ்ச்சுகள் வரை ஒரே பிஸி! ஜாகர் கட்டடத்தில் 13ஆவது மாடியில் இருந்த ஒரு அபார்ட்மெண்ட்டில் அவள் சுவரோரமாய்ச் சாய்ந்து நின்றிருந்தாள். “அம்மா!… 2 பிளஸ் 2 எத்தனை அம்மா?” “தொந்திரவு பண்ணாதே, கம்ப்யூட்டரை கேள்!”- யந்திரத்தனமாய் பதில் வந்தது. “அம்மா. சொல்லும்மா!” மீண்டும் குழந்தை சிணுங்கியது. ‘இரண்டும், இரண்டும் எத்தனை


ரசிகன்

 

 “சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன். கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார் என்று அவளுக்குத் தெரியும். பயந்த படியே சுருதி குறையக் கேட்டாள். “என்னங்க?” “ராதா எங்கே? கல்லுhரியிலிருந்து வந்து விட்டாளா? இல்லையா?” “வந்து விட்டாள். இதோ கூப்பிடுகிறேன்” உள்ளுக்குள் சென்று, “ராதா, ராதா. அப்பா கூப்பிடுகிறார் பார், சீக்கிரம் வா” என்றாள். ராதா வந்தாள். “ராதா, இந்தக் கோலத்தோடு தான் கல்லுhரிக்குப் போனாயா?” “அப்படியென்றால்?” “இந்த உடையோடு


புவனாவால் வந்த வினை

 

 “கல்யாணி, கல்யாணி” கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த கோபால், கல்யாணியைக் காணாததால் புவனாவின் கையில் ஸ்விட்டையும், பூவையும் கொடுத்து “அக்காகிட்டே கொண்டுபோய்க்கொடு” என்றான். அடுக்களையிலிருந்து வந்த கல்யாணிக்கு அந்தச் செயல் ஆத்திரமூட்டியது. “என்ன இப்பவெல்லாம் சீக்கிரம் வந்திடுறீங்க?” என்றாள் கிண்டலும் கோபமுமாக. “வேலையில்லை வந்தேன். ஏண்டா சீக்கிரம் வருகிறாய்? என்று கேட்பாய் போலிருக்கிறதே? பார்த்தாயா புவனா உங்க அக்காவை! ஒவ்வொருத்தி புருஷன் சீக்கிரம் வரவில்லையே என்று கவலைப்படுவாள். உன் அக்காவோ இப்படிக்கேட்கிறாள்?” “ஊக்கும்… எதற்கெடுத்தாலும் புவனா ஒருத்தி


நாய் வால்

 

 இப்பவெல்லாம் அந்த வீட்டில் வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் உள்ள ஒழுங்கும் எவர்சில்வர் பாத்திரமெல்லாம் கண்ணாடி போலப் பளபளப்பாயிருக்கிறதும் அஞ்சலை வந்த பிறகு தான். அஞ்சலையிடம் விமலாவுக்கு ரொம்ம நாளாகவே ஒரு கண். அதனால் தான், மானேஜர் வீட்டைவிட்டு அவள் வந்ததும் உடனடியாகச் சம்பளத்தில் ஒரு ஐந்து ரூபாயை ஏற்றிக் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொண்டாள். வேலையில் அத்தனை சுத்தம் அஞ்சலை! அதுமட்டுமல்ல… “ஆமாம்; அந்த மானேஜர் பொஞ்சாதி இருக்கே… கொண்டைப் பூவும், குதிகால் செருப்பும், பொட்டை


இது அரசியல்

 

 “என்ன பஸவப்பா… நம்ப கட்சியிலே வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனை செய்துகிட்டிருக்காங்களே… தலைவர் கிட்டே உன்னோட மனுவைக் கொடுத்தியா…?” என்று கேட்டுக் கொண்டே பரபரப்பாக உள்ளே நுழைந்தான் அழகிரி. “எதுக்கு….?” “என்ன, எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறே…? தேர்தல்லே நிற்க உனக்கு டிக்கெட் வேண்டாமா! நீ ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆக வேண்டாமா?” “எனக்கு எதுக்கப்பா பதவியெல்லாம்? என்னிக்கும் நான் ஒரு தொண்டனாகவே இருந்துட்டுப் போறேன்…’ அழகிரி விடுவதாக இல்லை. “நம்ப கட்சிக்காக ஆரம்பத்திலேருந்து பாடுபட்டவங்கள்லே நீ முக்கியமானவன்.. அப்படியிருக்க