Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 14, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

நான் பண்ணாத சப்ளை

 

 என் புத்தி எதிலுமே இந்த மாதிரிதான்—துப்புக்கெட்ட புத்தி பதினைந்து ரூபாய் என்றதும் தலையாட்டி விட்டு வந்தாய் விட்டது. கொஞ்சம் பேசியிருந்தால் எப்படியும் குறைத்திருப்பான். பன்னிரண்டு ரூபாய்க்கு முடித்துவிட்டிருக்கலாம். கூட இருந்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சரியென்று ஒப்புக்கொள்வதாக ஒருவார்தை நாக்கு நீட்டி சொன்னது குற்றமாகப் போய்விட்டது. உள்ளூர்காரனுக்கு வஞ்சனையா செய்வான் ? நாயத்தை பேசுகிறமாதிரி வாய் கூசாமல் சொல்லி விட்டார்கள். பதினைந்து ரூபாயாம் ‘ எலக்ஷன்காரன் இருபத்தைந்து கொடுத்தானாம். அப்படித்தான் வீடு என்ன பெரிய வசதியா….முன்புறம் ஒரு


கடன்

 

 கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான விஷயம். ஊரில் பெரிய புள்ளி அவர்தான். பயிர்வழி, வெளிவிவகாரம், நாலு பெரிய மனுஷாள் சாவகாசம் எல்லாவற்றிலுமே ஒசத்தியும் அவர்தான். ரெண்டடுக்கு மெத்தை வீடும் சுத்துக்காட்டில் ஆளுயரமதில் சுவரும், அதைப்போல மூணு மடங்கு உயரமுள்ள கனமான வைக்கோல் போரும் ஊரில் வேறு யாருக்கும் கிடையாது. எல்லாம் கால் காணி, அரை காணிகள் காலாணி குடிசைகள். நெல்லு வட்டிக்கும்,


இனியும் விடியும்….

 

 அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உற்சாகமும் மொத்தமாய் வற்றிப்போய் விட்டது. சட்டைக்காலரில் பொருத்தப்பட்டிருந்த மைக் வழியாக இன்னும் அவர் பேசிக் கொண்டிருந்தார். … இந்த முடிவுக்குக் காரணம், நீங்களோ, நானோ அல்ல. உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம், இதுவரை இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட்


குருவி வர்க்கம்

 

 சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். ‘கீச்கீச் ‘ சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தன. காச்மூச்சென்று சப்தம். சின்ன சலனம் ஏற்பட்டால் கூடப் போதும், கும்பலாக சிறகடித்துப் பறந்து சென்றன; பிறகு தயங்கித் தயங்கி, கட்டைச்சுவரில் உட்கார்ந்து, கூரையில் உட்கார்ந்து மறுபடியும் நெல்மணிகளை வந்து கொறித்தன. ஒரு பக்கம் நெல் பரப்பின் அடுத்த முனையில் ஒரு குருவி–பார்வைக்கு சிட்டுக் குருவி மாதிரியேயிருந்தது. ஆனால் சிட்டுக்குருவியில்லை. கொஞ்சம் வித்யாசம். கழுத்தில்


தற்செயல்

 

 நாளைய எட்டாம் நாள் கலியாணம். இந்நேரம் தாலி கட்டி முடிந்திருக்கும். வரிசை வைத்து காப்புக் களைந்து விட்டிருப்பார்கள். பந்திக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும் இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இருப்பார்கள், புதுக்கயிறு கழுத்திலே ஏறி விட்டிருக்கும். பச்சை மஞ்சள் பூச்சோடு பசபசவென்று தவழும், தங்கக் காசும் நாணலும் நெஞ்சிலே கொஞ்சும். கலியாணத்துக்காக செய்த புது நகைகளோடு கூரைப் புடவையோ, அதைக் களைந்து விட்டுப் பட்டுப் புடைவையோ கட்டிக் கொண்டு நிற்பாள். ஒன்றும் புரியாமல் சுற்றிச் சுற்றி வருவாள். பெருமிதத்தால்