Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 12, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

சகபயணி

 

 வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின்


ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டு

 

 அவர்கள் இறுதிப் பரீட்சை எழுதிய மையமான பெரிய பள்ளியின் தாழ்வாரம் காலியாயிருந்தது. அதில் கோபியும் கலைவாணியும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவள் அகப்படாமல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அவன் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். அவளைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேகமாகப் பாய்ந்து கடைசியில் அவளுடைய கையைப் பிடித்தான். அது இளங்குருத்தைப் போல் சில்லென்றும் சிறுத்துமிருந்ததை முதன்முறை முழுமையாக உணர்ந்தான். அவள் கையை உருவிக்கொண்டு மீண்டும் தப்பிக்க முயற் சித்தாள். கண்ணாடி வளையல்கள் உடைந்து சிதறிவிடுபவை போல் குலுங்கின. அவளை


2013 லவ் ஸ்டோரி

 

 கதைக்குள் செல்லும் முன்… நான் எப்பொழுதுமே அகிம்சை வாதி..காந்தீய வழியில் வாழ்பவள்..சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்..அடி தடி எல்லாம் எனக்கு பிடிப்பதில்லை..இப்படி ஒரு கதை எழுதவா என்று ஓராயிரம் முறை யோசித்து, கடைசியில், நான்கு பேருக்கு நன்மை நடக்குதுன்னா எத எழுதினாலும் தப்பில்லை என்று தோன்றவே இதை துணிந்து எழுதினேன்.பொறுமையாக படியுங்கள். —– அதிகாலை பொழுது.. எல்லோரும் வாக்கிங் ஜாகிங் என்று உடம்பை பேணி பாதுகாத்துக்கொள்ள துவங்கியிருப்பதால், அடிக்கும் குளிரையும் பொருட்படுத்தாது நடப்பதும் ஓடுவதுமாய் இருந்தனர். நமது


சகுனம்

 

 இரவு வந்து சோம்பலை முறிக்கும் நேரம்..நிலாப்பெண் தன் முகத்தை மறைத்து, சூரியன் உதிக்கும் காலைப் பொழுது, பகலவன் ஒளி, பனி மூட்டத்தை விலக்கி கொண்டு மெது மெதுவாக புலர்ந்து கொண்டிருந்தது. பரபரப்பான சென்னை மாநகரத்தின் அடையாறு… அங்கே அடுக்கு மாடி குடியிறுப்புகளுக்கு மத்தியில், தனி வீடு ஒன்று பிரம்மாண்டமாய் இருந்தது..அதில் “ஏன்னா ,சித்த இங்க வாங்கோளேன்..நான் இங்க கரடியா கத்திண்டு இருக்கேன்..நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கேள்..எழுந்து வாங்கோ..இந்த பலகாரம் பண்டங்கள எல்லாம் சரியா அடுக்கி வைங்கோளேன்”..என்றார்


இலவசம்

 

 “சாரூ..சாரு..எங்க போயிட்டம்மா நீ..இங்க வா..உன் வீட்டுக்காரன் ஏலம் விடாத குறையா கத்திக்கிட்டு இருக்கான்..போயி என்னன்னு கேளு “ என்றார் மரகதம். சாருவின் மாமியார் தான் இந்த மரகதம். அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட சாரூ, “ இதோ போறேன் அத்தை..உங்க பையனுக்கு வேற வேலை என்ன..அதை காணோம் இதை காணோம்னு சொல்ல போறார்.அவ்ளோதான்.அடுப்பிலே பால் வச்சிருக்கேன்.கொஞ்சம் பொங்கிடாம பாத்துகோங்க..இப்ப வந்தர்றேன்” என்றவள் தனது எட்டுமாத வயிறை தூக்கிகொண்டு கணவனை தேடி சென்றாள். அறை முழுவதும் குப்பையாக்கி வைத்திருந்தான் கேசவன்.. “