கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

பிசாசும் இராட்சதக் குடைக்காளானும்

 

 அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய அந்த நீண்ட வால் தரையில் இழுபட்டுக் கொண்டேயிருக்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால் வாலுள்ள பிசாசுகளிலெல்லாம் அவன் பொிய பிசாசு. வீதியால் போகும்போது அவனைக் கண்;ட பெண்கள் எல்லாம் பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒட்டமெடுத்தனர். அவர்கள் வீட்டுக்குச் சென்று “நான் பிசாசக் கண்டுட்டன். அங்கே பிசாசு போகுது. நான் அந்த பிசாசக் கண்டுட்டன். சத்தியமா, கடவுளறிய நான்


சமுத்திர ஆண்டவர்

 

 அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும், தேவாலயத்தை நோக்கி மேடேறும் தெரு நெடுகிலும், கையால் செய்த சவப்பெட்டிகளின் வரிசை. முழுக்க மூடிய கருப்பு அங்கிகளுடன் விதவைகள், வேதாகமத்தில் வரும் பெண்களைப் போல அழுதபடி பின்னே போனார்கள். இப்படித்தான் மாலுமி ஜீன் லினோலும், அவனது மகன் ஆசையும் ஆலய வெளி முற்றத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டார்கள்.


விளையாட்டுப் பிள்ளை

 

 எதிரி விண்கலங்கள் பூமியை நெருங்கிவிட்டன. கரிய வானத்தில் நட்சத்திரப் பின்னணியில் அவை ஜொலித்தன. ஒவ்வொன்றும் நூறு மைல் நீளமுள்ள ராட்சச விண்கப்பல்கள். பூமியின் போர்க் கலங்கள் குட்டி பொம்மைகள் மாதிரி அவற்றின் இடையில் புகுந்து புறப்பட்டு வீரமாகச் சண்டை போட்டன. எதிரி வீசும் ப்ரோட்டான் கதிர்களில் சிக்காமல் அவை நாலாபுறமும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பித்தன. நடுநடுவே ஒன்றிரண்டு அடிபட்டு நெருப்புப் பந்தாக எரிந்து தூசிக் குவியலில் காணாமல் போயின. வீடியோ விளையாட்டு கன்ஸோலைக் கீழே எறிந்துவிட்டு


ஜப்பானிய பூகம்பம

 

 கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி – அவள் ஜப்பானிய உடை அணிந்திருந்தாள், அப்புறம் ஒரு அம்மா. பக்கத்து அறையில் சின்ன வாலிபக் கூட்டணி, என்னவோ வார்த்தையாடியபடி இருக்கிறார்கள். பத்திரிகைக்காரரும், காரியும் அந்த அறைவழியே போகிற வருகிற சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த சிநேகித வட்டம் எழுந்து கொள்கிறது. மாலை நான்கு மணியளவில் அந்தப் பத்திரிகைக்காரரும், பத்திரிகைக்காரியும் அந்த வீட்டின் முன்வளாகத்தில் நிற்கிறார்கள். அழைப்பு மணி அழுத்தப்


ஜீன் திருடனின் விநோத வழக்கு

 

 நியூயார்க் போஸ்ட் விஷக் காய்ச்சலுக்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பு ! கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர் ஹாலிடெக்ஸ் என்ற புதிய மரபணு மருந்தை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்குப் பத்து மாத்திரைகளில் முற்றிலும் குணம் தெரியும் என்று கம்பெனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அமெரிக்கா முழுவதும் மூன்று கோடி பேருக்கு மேல் இந்தக் கடுமையான தொற்று நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். மிக வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு இருமல், உடல் வலி, களைப்புடன் காய்ச்சல் ஏற்படும்.