கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

கவிதைச் சிதறல்

 

 சங்கர ஹாலில் நடக்கப்போகும் கவியரங்கத்திற்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தான் கவிப்ரியன். சலவைக்குப் போட்டிருந்த கதர் ஜிப்பாவையும், கதர் வேஷ்டியையும் உடுத்திக்கொண்டான். ஒன்றிரண்டு பல்லுப்போன சீப்பால் தலையை வாரிக்கொண்டு, ஸ்டாண்டில் மாட்டியிருந்த அவனது ஒரே சொத்தான அந்த ஜோல்னா பையை எடுத்து மாட்டிக்கொண்டு, தேய்ந்துபோன செருப்பைக் காலில் நுழைத்துப் புறப்படுகையில் – “நில்லுங்க !” ஆணையிட்டாள் அவனது சகதர்மிணி. “என்ன?” என்பதுபோல் அவளை ஏறிட்டான். “துளி அரிசி இல்லே வீட்லே அதுக்கு ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் போங்க கவிபாட”


வசந்தகுமார்

 

 “ஏம்மா திலகா, புது கணக்கு ஆசிரியர் வசந்தகுமார் எப்படி? நல்லா பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?” தலைமையாசிரியர் தன் மகளைக் கேட்டார். “ரொம்ப விரட்டல் ஜாஸ்தியா இருக்கு. சரியான சிடுமூஞ்சியா இருக்காரு. சந்தேகம் கேட்கவே என் தோழிகள் எல்லாம் பயப்படுறாங்கப்பா.” தலைமையாசிரியர் சிந்தனையோடு நடந்தார். சின்ன வயசு, நல்ல திறமையிருக்கு. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி சிடுமூஞ்சின்னு சொல்ற அளவுக்கு நடப்பது ஏன்? கூப்பிட்டுச் சொல்லணும். அன்று மாலையே வசந்தகுமாரைக் கூப்பிட்டனுப்பினார். கொஞ்சமும் பதட்டமில்லாமல் வசந்தகுமார் தலைமையாசிரியர் ரூமை


பார்வைகளும் போர்வைகளும்

 

 எனக்கு கல்யாணம் கைகூடி விட்டது. இனி யாரும் என்னை கேலியாக பார்க்க முடியாது. அடுத்தவர்களுடைய கணவன்மார்கள் தரிசு நிலம் என்று உழமுடியாது. இடக்கு பேச்சுக்கள் எறிய முடியாது. இனி இந்த மீன் மற்றவர்களின் துhண்டிலில் மாட்டாது! என்று இரைந்து கத்த வேண்டும் போல் இருந்தது சுனந்தினிக்கு. முப்பத்தைந்து வயதிற்கு மேல் அவள் கல்யாண அப்ளிகேசன் பரிசீலிக்கப்பட்டுவிட்டதே. நேற்று தந்தையுடன் பெண் பார்க்க வந்த மதன்தான் எத்தனை அமைதியானவர் கண்களில் சதா கனவுகளுடன் புன்முறுவலோடு அமர்ந்திருந்தாரே தவிர ஒரு


தேய்மானம்

 

 காலை வேலை, பூக்களின் மணம் இதமாகப் பொங்கியது. சூரியன் அப்போதுதான் உதித்திருந்தான். மரங்களின் இலைகளின் மீதும் புற்களின் தண்டுகளின் மீதும் பனிநீர் இன்னமும் மினுமினுத்துக் கொண்டிருந்தது. அந்த உடைந்துபோன நாடாக்கட்டிலைவிட்டு அவசர, அவசரமான எழுந்தாள் கமலி. அந்த அரண்மனையில் அதுதான் அவளின் சுகபோக சிங்காதனம். அவள் எழுந்ததும் அந்தக் கட்டில் இறக்கம் குறைந்து நடுவில் குழியாகத் தொங்கியது. அதுவும் இல்லாவிட்டால் இந்த டிசம்பர் மாதக்குளிரில் தரையில் பாய் போட்டுப் படுக்க முடியுமா? பனிக்கட்டியாகிப் பாயைக் கிழித்துக் கொண்டு


கைக்கடிகாரம்

 

 சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது யாராவது ‘மணி என்னவாகிறது?’ என்று கேட்கும் பொழுது இடது கையை உயர்த்திப் பார்த்து மணி சொல்லும் மற்ற மாணவர்களை பார்க்கும்பொழுது அவனுக்கு ஏக்கமாக இருக்கும். அவன் வகுப்பில் அவனைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற மாணவர்கள் எல்லோருமே வசதி படைத்தவர்கள் அப்படி ஒன்றும் எதைப்பார்த்தாலும் தனக்கு அதுவேண்டும் என்று நினைக்கும் குணமுடையவன் அல்ல சரவணன். இருப்பினும் கைக்கடிகாரத்தின் மீது அவனுக்குத் தீராத ஆசை. ஓர் எலக்ட்ரானிக் கடிகாரம் இன்றைக்கெல்லாம் முப்பத்தைந்து ரூபாய்தான்.