கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

நீதி!

 

 நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், “”ஐயா… வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்…” நீதிபதி மறுத்துவிட்டார். உடனே வழக்காளி சொன்னார், “”ஐயா, நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் ஆள் கிடைக்க மாட்டான்!” நீதிபதி சிரித்துக் கொண்டே சொன்னார் – “”இல்லை சகோதரா, இதுபோல சன்மானம் கொடுப்பதற்கு நிறையப் பேர் கிடைப்பார்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை வேண்டாம்


இம்மியளவு குறைந்தால் கூட…

 

 ஒரு அழகிய சின்னஞ்சிறு கிராமம். அந்தக் கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்ற வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழை மற்றும் தென்னந் தோப்புகள்… அந்த ஊரின் செழிப்புக்குக் காரணம், ஊரை உரசிக் கொண்டு, கரைபுரண்டு ஓடும் நீல நதி. அந்த நதிக்கரையோரம் ஒரு சிறிய ஓட்டு வீட்டில், தேவகி என்ற யாதவ குலப் பெண் வசித்து வந்தாள் – பார்வையை இழந்த வயதான தந்தையோடு. தேவகிக்கு வயது இருபதுக்குள் இருக்கும். பள்ளிக்கூடம் பார்க்காதவள். நாலைந்து கறவைப் பசுக்கள் வளர்த்து,


நான் என்பது நானல்ல!

 

 மன்னன் ஒருவன் இருந்தான். ஆணவம் மிக்கவன். அமைச்சரை அழைத்து, “”அமைச்சரே, நான் இறைவனைக் காண வேண்டும். அதற்கு என்ன வழி?” என்று கேட்டான். “”நம் நாட்டு எல்லையில் ஒரு மாமுனிவர் இருக்கிறார். அவரிடம் கேட்டால் இறைவனைக் காண வழி சொல்லுவார்” என்றார் அமைச்சர். அரசனும் தனது பரிவாரங்களுடன் புறப்பட்டு, முனிவர் இருந்த இடத்தை அடைந்தான். முனிவரும் வந்திருப்பது அரசன் என்று அறிந்தும், அறியாதது போல “”மகனே, நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?” எனப் பரிவுடன் கேட்டார்.


யார் அழைத்தது?

 

 அன்றைக்கு சரஸ்வதி பூஜை. நான் அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா, தேவையான புத்தகம், நோட்டுகளையெல்லாம் எடுத்துவரச் சொன்னார்கள். நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றேன். சாமியருகில் புத்தகங்களை வைத்து, பூஜைகளைச் செய்து முடித்தோம். எனது அறைக்குத் திரும்பி வந்து, தேவையற்ற நோட்டுகளை பழைய பேப்பர்காரரிடம் போடுவதற்காக, எனது ரஃப் நோட்டுகளையெல்லாம் காலி அட்டைப் பெட்டி ஒன்றில் போட்டேன். அப்போது, “ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா..!’ என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. எல்லா இடங்களிலும் பார்த்தேன்.


எலியும் தவளையும்…

 

 ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத் தவளைக்கு எலி கொடுக்கும். இதற்கு நன்றிக் கடனாகத் தன் வீட்டுக்கு வரும்படி எலியைத் தவளை அடிக்கடி அழைக்கும். ஆனால் தவளையின் வீடு கால்வாய்க்கு மறுபுறம் இருந்ததால் எலி போக விரும்பவில்லை. ஒருநாள் தவளை வற்புறுத்தி அழைத்தது. தன் முதுகிலேயே அதைத் தூக்கிக் கொண்டு, கால்வாயைக் கடப்பதாகவும் சொல்லிற்று. எலியும் இதற்கு சம்மதித்து, எப்படிக் கொண்டு போவாய்