கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

சேமிப்பு

 

 ராமு..ராமு எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றாள் கீதா. இருக்கா வரேன். நான் முக்கியமான வேலையில இருக்கேன் என்றான் ராமு. ஸ்கூலுக்கு போறத விட உனக்கு என்னடா அவ்வளவு பெரிய வேலை? அக்கா, நான் என்னோட உண்டியலை எண்ணிக்கிட்டு இருக்கேன் என்றான் ராமு. இதைக் கேட்ட கீதாவுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ஏன்டா உனக்கு உண்டியலை எண்றது தான் இப்ப ரொம்ப முக்கியமா! அக்கா சேமிப்புங்கறது ரொம்ப முக்கியம். என்ன தொந்தரவு பண்ணாத… ஏன்டா


பொறுமை கடலினும் பெரிது

 

 வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது சுந்தரம்தான் ‘லுhட்டி’ அடித்துக் கொண்ருந்தான். சாமிநாதன் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம். அவர் அழைப்பில் என்னதான் மந்திர சக்தி இருந்ததோ தெரியவில்லை சுந்தரம் விளையாட்டை நிறுத்தி விட்டு அப்பாவிடம் ஓடி வந்தான். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினான். அப்பாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது வாரி அணைத்து முத்தம் கொடுத்தார். இப்போது அப்பா எனக்கு இனிப்பு வாங்கி வந்திருப்பாரே! சுந்தரம் நினைத்தது வீண் போகவில்லை மேசை மேல் வைத்த பைக்குள் ராமநாதனின் கைகள் ஜாங்கிரி,


அன்பு

 

 அந்த பங்களாவின் வெளியில் புல் வெளி இருந்தது. காலைத் தென்றல் இதமாக இருந்தது. பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள். காரை நிறுத்திவிட்டு டிரைவர் ஆறுமுகம் இறங்கி வருவதையும் பார்த்து “என்ன ஆறுமுகம், தம்பி வரலே?” கேட்டாள். “வந்துட்டாங்க, பெரிய அய்யா வீட்டுக்குப் போயிட்டு வரேன்னாங்க” என்றான் பணிவாக. அவனுக்கு எதிரில் உணர்ச்சிகளைக் காட்ட விரும்பாத அன்னபூரணி எழுந்து உள்ளே போனாள். இவன் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறான்?


ஜீவகாருண்யம்

 

 தொபீர்! தொபீர்! நடக்காமல் படுத்துவிட்ட மாட்டை ஆத்திரத்தோடு அடித்தான் வேலய்யன். போடா சக்கை என்றது மாடு. எழுந்திருக்கவில்லை. சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த குமாரசாமி தெருக்காட்சியைப் பார்த்துத் துடித்துப்போனார். அவருக்கு இளகிய மனம். அதுவும் பிராணிகளிடத்தில் தனிக்கருணை. இளவயதில் தன் வீட்டிலேயே நாய், மாடு எல்லாம் வைத்திருந்தார். அதற்கெல்லாம் செல்லப்பெயரிட்டுக் குழந்தைகளை விட அதிகமாகப் பேணி வளர்த்தவர். இன்று உடம்பு முடியாமல் போனதால் எல்லாவற்றையும் விட்டு விட்டார். மாடு எழுந்திருக்காததைக் கண்ட வேலய்யன் கையைப் பின்பக்கம் வைத்து


மெழுகுவர்த்திகள்

 

 தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார், யார் வந்திருக்கிறார்கள் என்று!” தீர்த்தா அவசரமாக வெளியில் வந்து பார்த்தபோது சுஜா நின்றிருந்தாள், தலை நிறையப் பூவும் வாய் நிறையச் சிரிப்புமாய்! நமக்குத் தெரிஞ்சு, கவுன் போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்த பெண்ணா இவள்? என்னமாய் வளர்ந்து விட்டாள்! பெண்ணின் வளர்த்தியை அதனால்தான் பீர்க்கங்காயுடன் ஒப்பிடுகிறார்களோ? “மலைத்தவாறே, “உட்காரம்மா!” என்றாள். “இல்லை மேடம், நான் அவசரமாகப்