கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல் தந்த போதனை!

 

 செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, “”நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன பலன் கிடைக்கும்?” என்று கேட்டார். செல்வத்தால் புண்ணியத்தையோ மோட்சத்தையோ விலைக்கு வாங்க முடியாது என்பதை செல்வந்தருக்கு உணர்த்த எண்ணிய ஞானி, அவரைப் பகல் வேளையில் தன்னைப் பார்க்க வருமாறு சொன்னார். மறுநாள் மதியவேளை, செல்வந்தர் அவரைப் பார்க்க வந்தார். அவருடன் ஞானியும் நடக்க ஆரம்பித்தார். வெயில் அதிகமாக இருந்த நேரம் அது. செல்வந்தருடைய கால்களுக்கு வெயிலைத்


இயலாமை முயலாமை இல்லாத ஆமை!

 

 அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன. டிசம்பர் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது. அரை ஆண்டு முடிந்தபின்னர் அப்பள்ளியில் வருடாவருடம் ஓட்டப்பந்தயமும், மாறுவேடப் போட்டியும் வேறு சில விளையாட்டுகளும் வைத்து, அதில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக ஓட்டப்பந்தயத்தில் எல்லா விலங்குகளுமே கலந்துகொள்ளும். ஒவ்வொரு வருடமும் பனிக்கரடியோ, பென்குவின்னோ, ஸீல்லோ முதலில் வந்து பரிசை தட்டிச்செல்லும். அதனால் ஆமைகளைப் பார்த்து அவை கேலி


கலைமானின் கொம்பு!

 

 ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது. தனது உருவத்தையும் வித்தியாசமான கொம்பையும் பார்த்துப் பெருமிதம் கொண்டது. தனது பலவீனமான மெல்லிய கால்களைக் கண்டு மனம் வருந்தியது. இவ்வாறாக, தனது கால்களைப் பார்த்துக் கலைமான் அவமானப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த ஓடைக்கு நீர் அருந்த வந்த சிங்கம், கலைமானைக் கண்டு, அதன் மேல் பாய்ந்தது. சிங்கம் தன்மேல் பாய்வதை அறிந்த கலைமான் உடனே ஓட்டம் எடுத்தது.


ஆமையும் அழகிய பெண்ணும்

 

 ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான். குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான். அவனுக்கு எக்பன்யான் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நிலையில்லாத சிந்தனை உள்ளவன். அவனுக்கு நிறைய மனைவிகள் இருந்தும் யாரையும் விரும்பாமலும் நேசிக்காமலும் இருந்தான். அதனால் மன்னன், மகனின் கண்ணில் படும் அழகான பெண்களையெல்லாம் அவனுக்கு மனைவியாக்கி வைத்தான். பெண்ணின் தாயோ, தந்தையோ சம்மதிக்கவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடும் துர்க்குணம் கொண்டிருந்தான். அந்நாட்டில்


துருப்பிடிக்க விடாதே!

 

 மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒருமாதமாகத் தீவிரமாகப் பயிற்சி செய்த மணி ஓடுவதற்குத் தயாராகக் களத்தில் நின்றான். இந்தமுறை எப்படியாவது பரிசை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் நிறைந்திருந்தது. விசில் ஊதப்பட்ட சத்தம் கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையின் கால்களைப் போலப் பறந்தன. எல்லோரையும் மீறி ஓடி, முதல் இடத்தைப் பிடித்தான். பரிசு வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்தான். வயலில் உழுதுவிட்டு வந்திருந்த அப்பாவிடம் தனது பரிசைக் கொடுத்தான்.