கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 30, 2013

1 கதை கிடைத்துள்ளன.

விளையாட்டு வாத்தியார்

 

 வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் நம்புவதற்கு சிரமமாக இருந்தது. அண்ணன் செல்வத்தை போலீசில் பிடித்துக்கொடுத்த விளையாட்டு வாத்தியார் குமாரையே தான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது பற்றி அவளுக்கு வியப்பாய் இருந்தது. அண்ணன் செல்வத்தை நினைத்து, கைகாலெல்லாம் நடுங்கியது