Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 29, 2013

3 கதைகள் கிடைத்துள்ளன.

பல்லி ஜென்மம்

 

 அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து அலுத்துப் போன அவை, உடல் நலத்துக்கு தீங்கானது என்ற முன்னறிவிப்பை கிழித்தெறிந்து தாம்பத்யம் அனுபவிக்க ஆரம்பித்து கொஞ்சநாட்கள்தான் ஆகியிருந்தது. அந்தக் கவர்ச்சி முழுதும் தீர்ந்துவிட்டபிறகு தெளிந்த பார்வையுடன் அவை அறை முழுதையும் நோட்டமிட்டன. சோர்ந்து போய்க் கிடக்கிற இளைஞனும் அவனுடைய காலடியில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணும் அப்போது நிச்சலனக்


மரியா

 

 மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள் முடி ஒப்பனைச் சீப்புகளுடன் நின்றிருந்தாள். ரொம்பவும் கவர்ச்சியற்றுத் தெரியாமல் இருக்க வேண்டாமே என்று ஒரு ரோஜாப்பூவை முடியில் செருகிக் கொண்டு வெளிப்பட்டாள். அவனைப் பார்த்தபின்போ தன் தோற்றம் பற்றி இன்னமும் அவள் வருந்த நேர்ந்தது. மரித்தோர் பணி மையத்தின் ஆட்கள் சோகம் ததும்ப இருப்பார்கள் என்று எதிர் பார்த்ததிற்கு மாறாக அவன் இளைஞனாய் கட்டம் போட்ட


அந்தப் பையனும் ஜோதியும் நானும்

 

 ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில் மின்பல்புகளை ஏற்றிக் கொண்டுவந்த கை வண்டியை நிறுத்திவிட்டு என்னோடு ஒரு பழக்கீற்று சாப்பிட்ட அற்புத முண்டாசுக்காரனுக்கு நல்ல தர்பூசனிப்பழங்கள் எந்த ஊரில் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தது. எரிச்சுடையார் கோவில் பிரகாரத்தில் நிற்கிற மரத்து நெல்லிக்காய்கள் போல வேறெங்கும் கிடையாது என்று அம்மா சொல்வாள்.