Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 23, 2013

8 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுகள் தந்த பரிசு

 

 சீதாவின் அப்பா சீனிவாசன், அம்மா வசந்தி. சீதாவிற்கு அவளுடைய அப்பா என்றால் அவ்வளவு பிரியம். அவளுடைய அப்பாவிறகும் சீதா என்றால் உயிர். சீதா 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அவளுடைய அப்பா இறந்து விட்டார் என்பதை அவளால் நினைத்துக் கூட பார்கவே முடியவில்லை. ஆதை விட அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. ஓவ்வொரு நாளும் அவளுடைய அப்பாவின் நினைவுகளிலேயே வாழ்ந்தாள். அவளுடைய அப்பாவுடன் வெளியே சென்ற


ஆனந்தியம்மா

 

 “ஏன் டா இப்படி ஏன் உசுர வாங்குற…. இதுக்கு பேசாம ஆனந்தி கிட்டையே உன்ன விட்டுட்டு வந்துர்கலாம்…” எனக்கு விவரம் புரியாத வயதில் இருந்தே என் அம்மா என்னை திட்டுவதென்றால் இந்த வார்த்தையை உபயோகிக்காமல் இருந்ததில்லை. என்னை திட்டும்போது மட்டுமல்லாமல் எங்களை பற்றி நாங்கள் என்ன பேச ஆரம்பித்தாலும் கடைசியில் ஆனந்தியோடு தான் எங்கள் பேச்சு முற்று பெறும். தாய் மகன் என்ற எங்கள் உறவிர்க்கிடையில் ஆனந்தி என்பவளின் பங்கு மிகப்பெரிது என்பதை என் அம்மா சொல்லி


விலை

 

 வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும், பஜனையுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஞானப்பழமாக, ஒளிரும் விளக்காக, அருளும் ஆசானாக விளங்கிய அந்தப் பூஜ்யரின் முன்னால், ஒவ்வொருவரும் அடக்கமுடனும், பணிவுடனும் சென்று, அவரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். வேதகிரி கொணர்ந்திருந்த வில்வமாலையைத் தன்மீது அணிந்து கொண்டவர், ‘என்ன, திருப்திதானே?’ என்ற தோரணையில் வேதகிரியைப் பார்த்த போது, மெய்சிலிர்த்துப் போயிற்று. ஜடாமுடியுடன் விளங்கும் பரமேஸ்வரனைப் பார்த்த


பழிக்குப்பழி

 

 நான் சென்னையிலுள்ள ரெயில்வே ஆபீஸில் ஒரு குமாஸ்தா. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் என் குடும்பத்தை (மனைவி ஒருத்தி. ஒன்றைரை வயசுக் குழந்தை. தம்பி கிட்டு இவர்களை)ப் போμத்து வந்தேன். எனக்குப் பத்து வயது ஆவதற்குள்ளாகவே என் தகப்பனார் இறந்து விட்டார். சென்னையிருந்து நாற்பது மைல் தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் – அதுதான் நாங்கள் பிறந்த ஊர் – எங்களுக்குக் கொஞ்சம் நிலம் நீர் வீடு வாசல் உண்டு. தகப்பனார் இருந்த வரையிலும் அவரே சொந்தப் பயிர்


வே

 

 “இன்றைக்கேனும் கட்டாயம் கேட்பார்கள்’ என்றசபலத்துடன் வீட்டுப் படியேறினாள் மாலதி. கண் சோர. நடை துவள. மச்சுப்படி ஏறுகையில் விழுந்துவிடாமருக்க வேண்டுமே என்றஉணர்வில் கையால் சுவரைப் பற்றிக் கொண்டாள். கூடத்திருந்து மங்களத்தம்மாளின் கீச்சுக்குரல் ஒத்தது. இறைவனின் படைப்பில் உண்டான எத்தனையோ மாதிரிகளில். மங்களத்தம்மாளின் குரல் ஒரு தனி மாதிரி. அது தடிக்கவும் தடிக்கும்; கீச்சென்று செவிகளில் பாயவும் பாயும். “ஊரு உலகத்துக் கயாணமா நடந்திருந்தாத்தான் கேள்வியே இல்யே!” மாலதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. மச்சுப்படி அவள் காலை அனுப்ப


மண்

 

 அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை மரங்கள் கட்டியிருந்தார்கள். அங்கிருந்து. கிராமத்தின் ஓரே “தேசிய சாலை’ யான வீதியில். இரண்டு பக்கங்களிலும் ராமாயி வீடு வரை, கம்பங்கள் நட்டு, தென்னங் குருத்து, மாவிலைத் தோரணங்கள் காற்றிலே மெல்லச் சலசலத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பெரிய பெரிய கோலங்களில் பெண்களின் கைவண்ணம் மிளிர்ந்தது. அந்த ஊரில் பிறந்த சின்னத்தாயி, இங்கிலாந்திருந்து பெற்றோருடன் –


ஒவ்வொரு கல்லாய்

 

 அந்த வீட்டில் இவன் குடும்பத்தோடு குடியேறியபோது பக்கச்சுவர் பின் சுவரெல்லாம் பூசியிருக்கவில்லை. வீட்டிற்குள் எப்போதும் சிமிண்ட்வாசம். அறுத்த மரம் வாசம். பெயிண்ட் வாசம். கழுவக் கழுவ சிமிண்டும். தூசியும் வெகுநாளைக்கு வந்து கொண்டிருந்தன. ஜில்லென்றதரையும் சுவர்களும் அளித்த குளிர்ச்சி. கெடு பிடியான வாசனையெல்லாம் சேர்ந்ததில் அவளுக்கும். பிள்ளைகளுக்கும் ஒரு வாரத்திற்குக் கடுமையான ஜலதோஷம் கண்டது. “வீடு புதுசு’ என்று காட்டவும். போகிறவருகிறவர் நின்று பார்க்கவுமென்று பலவற்றைவீட்டுக்காரர் செய்திருந்தார். “குமார் இல்லம்’ என்று தன் மகனின் பெயரை வீட்டிற்கு


கிழிசல்

 

 காப்பிக் கடையில் சரியான கூட்டம். ஆள் இருக்க இடமில்லை. நீள வாட்டத்தில் போட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பெஞ்சின் ஓரங்களில் இருந்தவர்களுக்கு ஒரு கை முட்டியை ஊன்றுவதற்கு மட்டுமே இடம் இருந்தது. கை கழுவிவிட்டு வந்தவர்கள் தேயிலை குடிக்க வரும் முன் காயான இடத்தில் வேறு ஆட்கள் அமர்ந்தாயிற்று. தேயிலையை நின்று கொண்டே குடிக்கும்படி. ஆயிற்று. மூன்று பேர் நான்கு பேராக வந்தவர்களுக்கு எல்லோருக்கும் ஒரே பெஞ்சில் இடம் கிடைக்கவில்லை. வெவ்வேறு பெஞ்சுகளில் அமர்ந்தவர்களுக்கு