கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 22, 2013
சட்டை
அவன் துறவி! வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு எனில், அவன் துறவிதான். முப்பது வயதில் அவன் புலனின்ப உணர்வுகளை அடக்கப் பழகிக் கொண்டான் என்று சொல்வதை விட, அவற்றில் நாட்டம் இல்லாததே அவனது இயற்கையாய் இருந்தது என்று சொல்வதே பொருந்தும். இதற்கு அர்த்தம் அவனிடம் ஏதோ குறைஎன்பதல்ல. அவன் நிறைவான மனித வாழ்வின் தன்மையிலேயே குறைகள் கண்டான். ‘ஓட்டைச் சடலம் உப்பிருந்த பாண்டம்’ என்று பாடும்
மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து
மூக்கப்பிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது. அது அப்படி விழிப்புற்று அரிப்புத்தருவதற்குப் பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும். சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிறமனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்புப் பெற்று. குடை குடை என்று குடைந்து. முன் எப்பவோ பண்ணிய பாபத்துக்கு – அல்லது தவறுக்கு – பரிகாரமாக இப்போது செயல் புரியும்படி தூண்டித் துளைப்பது ஏனோ தெரியவில்லை, மனித மனம் மனசாட்சி என்பதெல்லாம் விசித்திரமான தத்துவம் என்றோ எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத