கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 18, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

இலட்சிய அம்புகள்

 

 கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள். கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின் முன்னாள் கைகளை அசைத்து, ஆண்களின் அடிமைகளா பெண்கள் . . .? என ஆரம்பித்து ஆவேசமாகக் கவிதை பாடினான். பெண்கள் பரம்பரைத் தளைகளை உடைத்தெறியும் எண்ணமேயின்றி முடங்கிக் கிடப்பதால்தான் பிரச்சனையே எழுகிறது என்று பொருள்பட அவன் மிக இயல்பாகப் பாடி முடிந்ததும் கைதட்டல்கள் அரங்கத்தை அதிரச் செய்தன. சுற்றிலும் அமர்ந்திருந்த ஆண் கவிஞர்கள் காலரை நிமிர்த்திக்


குறுக்கீடுகள்

 

 பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி நேரத்திலே மூணு கால் ஆச்சு ஆபீஸ் பூராவும் தேடறோம். எங்குமே அகப்படாத நீ எப்படி ஸீட்டிலே இப்ப… க்வீக் போ, போ!” என்று அவசரப்படுத்தினாள். “கான்டீனுக்குப் போயிட்டு வரேன் புஷ்பா அது சரி போன்ல யாருன்னு கேட்கலையா நீ?” “யாரோ செல்வரத்தினம்னு சொன்னார்.” “ஓ! எதற்காக என்னை அழைக்கிறார். ஒரு வேளை அவர் மகனை விட்டு


ரஞ்சிதாவா…..?

 

 ரஞ்சிதாவா . . .? இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய் காணாத தலை. . . இவளா ரஞ்சிதா சே! சே! இருக்காது. ராதா தடுமாறினாள். அந்த வளையம் சூழ்ந்த கண்கள் ராதாவை மீண்டும் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டன. அந்தப் பார்வை ஆழத்துள் இறங்கி அறுந்த தந்தியைச் சேர்த்து மீட்டினாற் போல ராதாவின் உணர்வைச் சுண்டிவிடுகிறது. நாடி, நரம்புகள் எல்லாம் அதிர்கின்றன. உயிரை உயிரே மறைத்து விடுமோ? அந்த


கதையாம் கதை

 

 “டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ… பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்” உற்சாகமாக வரவேற்றார். “குட் ஈவினிங், எங்கே சார் ஒய்ப் இல்லே?” ‘இருக்கா, இருக்கா அவ உலகத்திலே ஐ மீன் அடுப்படியிலே.’ அதைத் தொடர்ந்து க்ளுக்’ என்று சிரித்தாள் பிருந்தா. உள்ளே வேலையாய் இருந்த நீலாவின் உள்ளம் இந்த உரையாடலைக் கேட்டு கொதித்தது “வந்துவிட்டாளா, துப்புக்கெட்டவ. ஆபீசில் அடிக்கும் கொட்டம் போதாதென்று வீட்டிற்கும் அல்லவா வந்து விடுகிறாள்,


வாழ்க்கை மரம்

 

 “மஞ்சு, சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு இன்னைக்கு மாம்பலத்துக்காரர்கள் உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். புறப்படும் பொழுது அம்மா ஞாபகமூட்டினாள். மஞ்சுவுக்கு வேதனைக்குள்ளும் சிரிப்பு ஊடுருவியது. அம்மாவுக்குத்தான் எத்தனை விடா முயற்சி. அவளுக்கு நம்பிக்கையில்லை எத்தனையோ வரன்கள் வந்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுப் போய் லெட்டர் எழுதுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவர்களை இன்றுவரை காணவில்லை. இன்று வரும் மாம்பலத்துக்காரன் மட்டும் என்ன வரதட்சணை கேட்காமலா மஞ்சுவின் மனசுக்காக சம்மதம் சொல்லப் போகிறான். ஒரு மணி நேரம்