கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 14, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

அசோகர் கல்வெட்டு

 

 எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்கு செய்து கொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்ததாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு


கபரக்கொய்யாக்கள்

 

 சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி. கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை. ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு ‘பாலிக மஹா வித்தியாலய’ என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்! சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து ‘சறுக்கீஸ்’ விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதிரி லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது.


மகான்கள்

 

 நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை, குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம் அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் உறவு


அணி

 

 ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந்தான் வேலை செய்யிறன். தம்பிக்கு ‘சேவ்’. கையோடு முடிந்துவிடும். இளமட்டங்கள் சில, எங்களுடைய ‘ஸ்டை’ யிலைப் பார்த்துத்தான் உள்ளே வாருங்கள். ‘ஜங்கி ஸ்ட’லில் என்று சொல்லி, நாக்கு வழிப்பதைப் போல அந்தரப்பட்டு, ஒரு படத்தையும் அதில் நடிக்கும் நடிகனின் பெயரையும் சொல்லி, அப்படியே வெட்டிவிடும்படி சில விறுதாக்கள் கேட்கும். அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? மயிரைக் கவனமாகச் சீவி விடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள, ஒரு


மீன் சாமியார்

 

 ‘மூர்த்தி! வேண்டாம்; வேண்டாம்! அலைகள் தம் இஷ்டப்படியே புரண்டு கொண்டிருக்கட்டும்! ‘ என்று கண்டிப்பது போன்ற குரலில் நான் எச்சரிக்கை செய்ததும் நாராயணமூர்த்தி திடுக்கிட்டுத் திரும்பி ‘ஊம் . . . ? என்ன ? ‘ என்று வினவினான். ‘இல்லை, நானும் ஐந்து நிமிஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீ ஏகாக்கிர சித்தனாய் அன்பும் அனுதாபமும் நிறைந்த கண்களுடன் சமுத்திரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே! ஒருவேளை யோக சக்தியால் கடலின் சலனத்தைக் கட்டுப்படுத்தி அதை அமைதியான நித்திரையில் அமர்த்தப்