கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 13, 2013

1 கதை கிடைத்துள்ளன.

சூறை

 

 இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸ்டேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி ? பொழுது போக எனக்கும் ஒரு வேலை வேண்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்கப்புறம் இந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிற அல்ப ஆசை என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப்