கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 11, 2013

14 கதைகள் கிடைத்துள்ளன.

சப்பாத்தி… சப்பாத்தி!

 

 அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார். தமிழரசனின் மனைவி இரண்டு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். இருவரும் சிறிது தூரம் நடந்தனர். வழியில் மற்றொரு பயணியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். மூவரும் பேசிக் கொண்டே செல்லலாயினர். அப்போது அவர்கள் சிறிது ஓய்வு எடுக்க எண்ணினர். வழியில் ஒரு கிணறு இருந்தது. பசியும் தாகமும் எடுத்தது. சாப்பிட்டுவிட்டு செல்லலாமே என எண்ணியவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தனர்.


அளவுக்கு மிஞ்சினால்…

 

 ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அதில் ஒரு குரங்குக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. ஒரு சிறிய தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னச் சின்ன செடிகளாகப் பார்த்து அவற்றையெல்லாம் பிடுங்கி வந்து தனது தோட்டத்தில் நட்டு வைத்தது. ஒரு மாதம் ஆயிற்று. செடிகள் வளரவே இல்லை! தாய் குரங்கிடம் போய் கேட்டது, “”இவ்ளோ நாளாச்சு… ஒரு செடிகூட வளரவே இல்லையே ஏன்?” “”அதுவா, செடிகளை நட்டால்


புதையலைப் பாத்தீங்களா!

 

 சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தைக் கட்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார் அருணாச்சலம். இதைக் கவனித்த ஒரு வியாபாரி, “”ஐயா, இவ்வளவு பணத்தைத் தனியாக எடுத்துக் கொண்டு போகாதீர்கள். துணைக்கு நமது ஆட்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றார் கவலையுடன். அருணாசலம் இதைக் கேட்கவில்லை- “”எந்த ஆபத்து வந்தாலும் நான் சமாளித்து விடுவேன். நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தைரியமாகக் கிளம்பினார். நன்றாக இருட்டிவிட்டது. காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார் அருணாச்சலம். சரக் சரக்கென்று பின்னால்


குருதிக் கொடை

 

 ஓர் இனிய மாலைப்பொழுதில் அந்தக் கலை அறிவியல் கல்லூரி மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் கல்லூரியில் குருதிக் கொடை நிகழ்வு (இரத்ததான முகாம்) ஒன்று நடைபெற இருந்ததே அதற்குக் காரணம். அரசுத்துறை, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் இவற்றுடன் இணைந்து அந்தக் கல்லூரியே முன் நின்று குருதிக் கொடை நிகழ்வை நடத்த இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளில்தான் பேராசிரியர்களும் மாணவர்களும் முனைந்திருந்தார்கள். குருதி கொடுக்க வரும் கொடையாளிகளாகிய சுற்றுப்புற மக்களுக்கு வழி காட்டவும் உதவிகள் செய்யவும் தேவையான


உண்மை அறிந்தால்…

 

 உயர்நிலைப் பள்ளி ஒன்றின் 9-ஆம் வகுப்பு. அறிவியல் ஆசிரியர் அன்று விடுப்பு. தமிழாசிரியர் அவருக்குப் பதிலாக வகுப்புக்கு வந்தார். வழக்கத்துக்கு மாறாக அன்று அவரது கையில் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது. மாணவர்களிடம் சிறு சலசலப்பு. தமிழய்யா ஏன் இந்தக் கண்ணாடி ஜாடியைக் கொண்டு வந்துள்ளார்? ஒருவர் ஒருவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அந்த வகுப்பு மாணவன் மகேஷ். குறும்புக்காரன். “ஒரு கதை சொல்லுங்கள் ஐயா… அறிவியல் பாடம் ஏதாவது நடத்தி அறுத்துவிடாதீர்கள்…’ என்றான். ஆசிரியர் பொறுமையுடன்,