கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 8, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

பேழைக்குள் ஒரு பூதம்!

 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள் யாராவது அவற்றைப் பிடித்து எதிலாவது அடைத்து விடுகிறார்கள்! அப்படித்தான் இந்தக் கதையில் வரும் பூதத்தையும் எவரோ பிடித்து ஒரு பேழைக்குள் அடைத்துவிட்டிருந்தார்கள்… அது யாரென்பதுதான் தெரியவில்லை! அடைத்து வைத்தவர் யார் என்று பூதத்திற்கே நினைவில் இல்லாதபோது நாம் என்ன செய்யமுடியும்? ஆனால், பூதத்தைப் பேழையிலிருந்து திறந்து வெளியே விட்டவர் யார் என்பதுதான் நமக்குத் தெரியுமே, அது


வளர விடாதே!

 

 தனது மூன்று மகன்களையும் ஒழுக்க சீலர்களாக வளர்க்க எண்ணினார் அந்தத் தந்தை. ஆனால், அவர் விருப்பத்துக்கு மாறாக, மூவரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களை நல்வழிப்படுத்த எண்ணிய தந்தை, ஒருநாள் தனது மூன்று மகன்களையும் தன்னுடைய தோட்டத்துக்குக் கூட்டிப் போனார். இளைய மகனிடம் அங்கிருந்த ஒரு சிறு செடியைக் காட்டி “இதை உன் கையால் பிடுங்கு..’ என்றார். அவன் மிக எளிதாக அதைப் பிடுங்கி எறிந்தான். இரண்டாம் மகனிடம், புதர்போல வளர்ந்திருந்த ஒரு செடியைக் காட்டி,


காரணம் புரிந்தது…

 

 நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது – பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும் அப்பாவும் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள். “”என்ன நடந்தது?” கேட்டார் தாத்தா. “”மாநில விளையாட்டு அணிக்கான தேர்விலே, பாலு எதிர்பார்த்தபடி அவனுக்கு இடம் கிடைக்கலே. அதற்காக வருந்துகிறான்…” என்றனர் பாலுவின் பெற்றோர். “”அப்படியா? காரணத்தைப் புரிந்துகொண்டால் சமாதானமாகி விடுவான்” என்றார் தாத்தா. தாத்தா கூறியதைக் கேட்டதும். “”இதுல என்ன காரணம் இருக்கு? மாவட்ட அளவிலே நான்தான்


காலம் உன் கையில்

 

 காலம் மணி ஒன்பது. சூரியக் கதிர்கள் முருகன் வீட்டையும் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்னும் முருகன் எழுந்திருக்கவேயில்லை. “முருகா, எழுந்திரு, எழுந்திரு’ என அவன் அப்பா சத்தம் போட்டபடியே வந்தார். ஒரு முறை தலையைத் தூக்கிப் பார்த்த முருகன் “கொஞ்சம் இருங்கப்பா’ என்று சொல்லி விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டான். “ஏங்க, குழந்தைக்கு இப்பதான் பரீட்சை முடிஞ்சிருக்கு… கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே.. விடுங்க…’ என்று அவன் அம்மா முருகனுக்காக பரிந்து பேசினார். அதைக் கேட்டதும் முருகன் இன்னும்


பேராசை பெருநஷ்டம்!

 

 நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி வந்தார். அவரைச் சந்தித்த நடேசன், “”எனக்கு இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும்… அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். “”நீ உனது வீட்டுக்கு வரும் பிச்சைக்காரனுக்குத் தினமும் பிச்சை போடணும்… நீ எவ்வளவு கொடுக்கிறாயோ, அது இரட்டிப்பாகி, என் அருகே இருக்கும் இந்த மந்திரப் பையில் இருக்கும்! நீ தினமும் மாலையில் வந்து