கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 7, 2013

29 கதைகள் கிடைத்துள்ளன.

இயற்கையின் இடுகாடு

 

 பொறியாளனாய் வேலை பார்க்கும் எனது நண்பன் லட்சுமணனுடன் வழக்கம்போல இரவு உணவை அந்த உணவகத்தில் உண்டுவிட்டு வெளியே வந்தோம். நாங்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இப்படி ஒரு நல்ல உணவகத்தில் ஒன்றாகச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். “”இன்னைக்கு நாளே சூப்பரா இருந்துச்சுடா..” “”அப்படி என்ன ஆச்சு?” “”மேனேஜர் என்னைப் பாராட்டுனாருடா…” “”ஓ… இன்னைக்கு எனக்கும் நல்ல நாள்தான். க்ளினிக்ல நல்ல கூட்டம்!” சென்ற மாதம்தான் நான், லட்சுமணன் மற்றும் சில நண்பர்களுடன் கொடைக்கானல், ஆனைமலை ஆகிய


எங்கே கடவுள்!

 

 “எங்கே கடவுள்?’ என்றான் சீடன். “எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு. சீடன் வீட்டுக்குச் சென்றான். வழியில் அவனை நோக்கி ஒரு யானை வந்தது. “விலகிப் போ… விலகிப் போ… யானைக்கு மதம் பிடித்து இருக்கிறது’ என்று கத்தினான் யானைப்பாகன். “”கடவுள் எங்கும் உள்ளார் என்று குரு சொன்னார். அப்படியானால் இந்த யானைக்குள்ளும் அவர் இருப்பாரே” என்று சீடன் நினைத்தான். கடவுள் கருணையுள்ளவர் ஆயிற்றே! கடவுள் இருக்கும் இந்த யானை என்னை


நண்பனின் குரல்!

 

 கார்த்திக் என்னைப் பார்” குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே அவனை பயம் தொற்றிக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். பயம் ஏற்படும் போதெல்லாம் அம்மா சொல்லித்தந்த ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பான். அன்றைக்கும் அப்படித்தான், பயம் வந்தவுடனேயே அந்த ஸ்லோகத்தை முணுமுணுக்கத் தொடங்கினான். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே குரல், “”பயப்படாதே கார்த்திக்! நான் பேயோ பூதமோ, பிசாசோ அல்ல; நான்தான் உன்


உத்தமன்

 

 குருகுல மாணவர்களுக்கு உத்தமன், மத்திமன், அதமன் ஆகியோரின் தன்மைகளைப் போதிக்க நினைத்தார் ஒரு குரு. அச்சு அசலாக மூன்று மாணவப் பொம்மைகளைக் காட்டி, அவற்றின் காது மற்றும் வாய் ஆகியவற்றில் நுண்ணிய துவாரம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். பின்னர் – ஒரு பொம்மையின் காது வழியே ஒரு சிறு குச்சியை நுழைத்தார். அது பொம்மையின் வாய் வழியே வெளிப்பட்டு வந்துவிட்டது. குரு சொன்னார்: “”இவன்தான் அதமன். தன் காதால் கேட்டவற்றையெல்லாம் கண்டவர்களிடமும் தனது வாயால் சொல்லி விடுவான்.”


புது விருந்தாளி!

 

 வன காண்ட்ராக்டர் ராஜசேகரன் மழைக்காலம் முடிந்ததும் காட்டுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இம்முறை அவரது பதின்மூன்று வயது மகன் கார்த்திக்கும் பத்து வயதான செல்வியும் அடம் பிடிக்கலாயினர். “”அப்பா, அப்பா… இதுவரை நாங்க காட்டைப் பார்த்ததேயில்லை. ஆறு ஓடுவதைப் பார்த்ததில்லை. மலையை நேரில் பார்த்ததில்லை. கதையிலேதான்ப்பா படிச்சிருக்கோம். காட்டு விலங்குகளோட பேர்கள் மட்டும்தான் தெரியும். எல்லாவற்றையும் நேரில் பார்க்கணும்ப்பா… அப்பா, ப்ளீஸ்ப்பா…” “”இல்லே கண்ணுங்களா… அங்க நிறைய குளிர் இருக்கும். சீக்கிரமே மலேரியா ஜுரம் வந்துடும். காட்டு