கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 6, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்தப்புளிக்காடு

 

 அகிலாண்டபுரம் என்ற கிராமத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது ஒத்தப்புளிக்காடு. அதாவது அந்தப் பகுதியில் வெகுகாலத்திற்கு முன்னர் ஒரு புளியமரம் மட்டுமே இருந்ததாம். அதனால் அப்பகுதிக்கு ஒத்தப்புளிக்காடு என்று பெயர் வந்தது என கிராமத்தினர் கூறிவருகிறார்கள். அந்த ஒத்தப்புளிக்காட்டில் மாரிமுத்துவுக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலமும், அவரது தம்பி குணசேகரனுக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலமும் இருந்தது. இருவரும் ஒரே கிணற்றிலிருந்துதான் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.


சத்தியத் திருட்டு

 

 புத்தகக் கண்காட்சியின் அந்த அரங்கிற்குள் தயங்கியவாறே நுழைந்த அந்தச் சிறுவன், புத்தகங்களையெல்லாம் பார்த்தவாறே, ஒரு புத்தகத்தின் முன்நின்று, சற்றுத் தயங்கியபின், இருபக்கமும் பார்த்து, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற உணர்வில், அப்புத்தகத்தைத் தன் வயிற்றுப் பகுதியில் சொருகிக் கொண்டு, மேல் சட்டையால் மறைத்துக் கொண்டான். மேலும் பல புத்தகங்களைப் பார்வையிடுவது போல் பார்த்தபடி, கூட்டத்தினிடையே வாயிலைக் கடக்கும் தருணத்தில், அவனது தோள் மீது ஒருகை விழுந்ததும் திடுக்கிட்டான். “”திருட்டுக் கழுதை… இங்கே வாடா…” என்று அந்தக் கண்காணிப்பாளன்


புத்தர் யார்?

 

 புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் மரணம் அவரைத் தழுவும் என்பதை உணர்ந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து சோகத்தில் ஆழ்ந்தனர். மகான் அருகில் இருந்த தொண்டர் ஆனந்தர், துயரம் தாங்காமல் கதறியழுதுகொண்டே இருந்தார். இலேசாகக் கண்விழித்த புத்தர் மெல்லிய குரலில், “”ஆனந்தா, ஏன் நீயே இப்படிக் கதறி அழுகிறாய்? மனதைத் தைரியப்படுத்திக் கொள். நான்தான் மீண்டும் நிச்சயம் பிறப்பேனே… இதனைப்


யானையும் பானையும்…

 

 கந்தர்வகோட்டை என்ற ஊரில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி செய்தாலும் சுய அறிவு இல்லாத மன்னனாக இருந்தான். பிறர் கூறும் சொல்லை ஆராயாமல் நம்புகின்ற இயல்புடையவன். தன்னைப் புகழ்ந்து பேசுபவருக்கு அள்ளிக் கொடுக்கும் குணம் படைத்தவன். பலர் அவனைப் புகழ்ந்து பேசி, ஏமாற்றி பெரும்பொருள்கள் பெற்றுச் சென்றனர். அந்த அரசனின் ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் சலவைத் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் பெயர் மாசானம். அரண்மனை ஆடைகளை நன்கு வெளுத்துக் கொடுத்து வந்தான். அடக்கமாகவும்


கதை பிறந்த கதை!

 

 முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர். இளவரசர்களுக்குரிய எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் சதாசர்வ காலமும் விருந்து, கேளிக்கை, வேடிக்கை, விளையாட்டு எனக் காலம் கழித்தனர். பாடம் கற்றுத் தர வரும் ஆசிரியரையும் கிண்டல் செய்து விரட்டி விட்டனர். இதனால் ஒருவரும் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரவில்லை. இதைக் கண்ணுற்ற மன்னர் சான்றோர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைத்து “இந்தப்