கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2013

70 கதைகள் கிடைத்துள்ளன.

அச்சம்!

 

 ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தன. இப்படிப் பயந்து சாவதை விட ஒரேயடியாக செத்துப் போய்விடலாம் என்று அந்த முயல்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. எல்லா முயல்களும் ஓரிடத்தில் கூடின. ஏதாவதொரு மலையுச்சியை அடைந்து அங்கிருந்து கீழே உள்ள குளத்தில் ஒன்றாகச் சேர்ந்து விழுந்து உயிரை விடுவது என்று முடிவெடுத்தன. திட்டமிட்டபடி முயல்கள் அனைத்தும் மலையுச்சிக்கு வந்து அங்கிருந்து குளத்தில் விழத்


சபாஷ் ராஜா

 

 ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான ஒரு மந்திரி இருந்தார். அவர் எல்லா ஞானமும் பெற்றவர். நல்ல கைதேர்ந்த பாடகர் ஒருவர் அந்த அரண்மனைக்கு வந்தார். அரசவையிலே பாட அரசரிடம் அனுமதி கேட்டார். அரசர் மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையை அசைத்தவுடன், பாடகருக்கு அடுத்தநாள் பாட அனுமதி கொடுத்துவிட்டார். பாடகரும் அடுத்தநாள் பாட வருவதாகக் கூறிவிட்டு அரண்மனையை விட்டுச் சென்றார். அரசருக்கு இசையை


மயிலின் வருத்தம்!

 

 ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது. “”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள். அற்பப் பறவையான குயிலுக்குக்கூட இனிய குரலைக் கொடுத்தீர்கள். எனக்கு ஏன் தரவில்லை? ஏமாற்றிவிட்டீர்களே… இது முறையா?” என்று கேட்டது. இதைக் கேட்டதும் பிரம்மாவுக்குக் கோபம் வந்தது. “”மயிலே, உனக்குக் குயிலின் மீது பொறாமை; அதனால்தான் இப்படிப் பேசுகிறாய்…” என்றார். உடனே மயில், “”பிரம்மனே, எனக்குப் பொறாமை எல்லாம் கிடையாது. என்னை நினைத்து வருத்தப்பட்டு, அப்படிக் கேட்டேன்…”


தேடல்

 

 பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன் கூர்ங்கண்ணன். கூரிய பார்வையுடையவன். அடுத்தவன் நற்செவியன். எவ்வளவு சிறிய ஒலியையும் கேட்டு அது எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது, யாருடையது என்று கூறிவிடுவான். மூன்றாவது மகன் வல்லவன். புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டையிட்டு வெல்லக் கூடியவன். நான்காவது மகன் மிகவும் சிறுவன். ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தந்தை வீட்டுக்குத் திரும்பவில்லை. பிள்ளைகள் அனைவரும்


கிரிவல மகிமை!

 

 ஒரு குருவைத் தேடி சிஷ்யன் ஒருவன் சென்றான். அவன் ராணுவத்தில் பணிபுரிபவன். தைரியமும் மன பலமும் உள்ளவன். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டான். குருவைச் சந்தித்ததும், அவரை வணங்கினான். பிறகு, “”எனக்கு மோட்சம் வேண்டும்! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் குருவே!” என்று கேட்டான். “”அது கிடைப்பதற்கு நிறையப் பாடுபட வேண்டும்… அது உன்னால் முடியுமா?” என்று கேட்டார் குரு. “”முடியும்… என்னால் முடியும்…” என்றான் அவன். “”இப்படியே கிளம்பிப் போ… ஏழு மலைகளைப் பார்ப்பாய்.