கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 3, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

இராஐதந்திரம்

 

 வரவேற்பறையில் வானொலியில் காலைச்செய்தி போய்க்கொண்டிருந்தது. ரஐனியால் அழமுடியவில்லை. மனதுள் மட்டும் குமுறிக்கொண்டிருந்தாள். நேரம் மதியம் பன்னிரண்டைக்காட்டியது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கத்தான் முடிந்தது. கண்கள் எரிவதாய் தெரிந்தது. பசி வயிற்றை மெல்லிதாக கிள்ளிப்பார்ப்பதை உணர்தவளாய் படுக்கையை விட்டு எழுந்தாள். காலை ஐந்து மணிக்கு வேலைக்குச்சென்ற கோபிக்கு சான்விச்சும் கோப்பியும் போட்டுக்கொடுத்து வழியனுப்பிவிட்டு மறுபடியும் படுக்கைக்கு சென்றவள் இப்போது தான் எழுந்திருக்கிறாள். யாழ்ப்பாணத்தில் இருந்து பொதி பொதியாக கனவுகளுடனும் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் விமானித்தவளுக்கு எல்லாமே கானல் நீராய் போனது


பொம்மைகள்

 

 அந்தக் கூடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். சுமதிகுமாரின் சேட் கொலறை கொத்தாய்ப் பிடித்தவளாய் பளார், பளார் என கன்னங்களில் அடித்து விட்டு சீ நீ எல்லாம் ஒரு ஆம்பிளை போதாக்குறைக்கு என்ரை தம்பி வேறை. என கத்தியவளாய் வெறுப்பாய் அவனை பின்பக்கமாய் தள்ளி விட்டு சேட்கொலறில் இருந்து கையை விடுவித்துக் கொண்டாள். கூடம் சலனமற்று இருந்தது. குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவுக்கு, சுமதியின் பிள்ளைகள் இருவரும் தாயின் இந்த திடீர் தாக்குதலால் பயந்தவர்களாய் செற்றி மூலைக்குள் ஒருவரை ஒருவர்


நிழல்கள்

 

 நன்றாக இருட்டிவிட்டது. வீதியில் வாகனங்கள் நன்றாக குறைந்துவிட்டது ஒரு சிலர் மட்டும் வீதியின் கரையில் அமைக்கப்பட்ட கட்டில் நடந்து போவது தெரிந்தது. இரவின் நிசப்தத்தை இடைக்கிடை கிழிப்பதாய் கார்களின் வேகம். மனசைக்கூட ஒருவழிப்படுத்த முடியாமல் திணறினேன். தூரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் கைகோர்த்தபடி மிகவும் அருகருகே அணைத்தபடி போவது தெரிந்தது. சற்று உற்றுப்பார்க்கிறேன். இந்த காட்சி என்னை மேலும் திணறடிக்க தவறவில்லை. பார்ப்பது அழகில்லை என மனசு சொன்னாலும் கண்கள் விடுவதாய் இல்லை. சரி பாவம் கண்கள்


ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்

 

 அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார். அவர் வேலைசெய்த தொழிற்சாலையில் ஆட்குறைப்புச் செய்தபின்பு வேலை இழந்தோருக்கான உதவிப்பணத்தைப்பெற்றுக்கொண்டு புதிய வேலைக்கு மார்க் முயற்சிப்பதை நாமறிவோம். எப்போதுமே அவர் முகத்தில் குறும்பும் புன்சிரிப்பும் கொப்பளிக்கும். அவரின் மனைவி ரெபேக்காவும் ஒர் இனிய பெண்தான். அவ வேலைக்குப் போனபின்பு மார்க் தனது தோட்டத்தில் மிகவும் உற்சாகமாக வேலைசெய்தபடி காணப்படுவார். அப்படி இல்லாவிடின்


அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!

 

 எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் ‘அ ‘ எழுதிய காலங்கள் என் மனத்தில் மின்னி மின்னி மறையும். அதைப் பிள்ளைகளுக்குச் சொன்னால் “அப்ப நீங்கள் படித்த Kinder garden ல் 5,6 விளையாட்டுச்சாமான் கூட இல்லையா” என்று பிள்ளைகள் அனுதாபத்துடன் என்னை ஒரு பார்வை! பிறகு அண்ணணும் தங்கையுமாக ஏதோ குசுகுசுப்பு! லிசா வீடும் அருகிலேயே இருப்பதால் ஒரு வாரம் நாங்கள் சாராவையும் சௌம்யாவையும் Kinder