கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

125 கதைகள் கிடைத்துள்ளன.

மெக்கானிக்!

 

 “டேய் தம்பி…!’ கார்பரேட்டரை பெட்ரோல் ஊற்றித் துடைத்துக் கொண்டிருந்த ராஜன் திரும்பினான். பஜாஜ் கப் ஸ்கூட்டியில் அமர்ந்தபடி, ஒரு காலைத் தரையிலும், மறுகாலை பிரேக்கிலும் அழுத்தியபடி கூப்பிட்டவரை நோக்கினான். கடைக்கு வரும் பல கஸ்டமர்களில் ஒருவர். பெயரெல்லாம் தெரியாது. சாக்லெட் கலர் கைனடிக் ஹோண்டா சார்… என்று வண்டிகளை வைத்துத்தான் கஸ்டமர்களை அடையாளம் சொல்வது ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்பில் வழக்கம். “மெக்கானிக் இருக்காரா?’ “யாருங்க முதலாளியா?’ “பின்னே! உன்னையா மெக்கானிக்கும்ப்பேன்.’ சுருக்கென்றது அவரின் வார்த்தைப் பிரயோகம். “முதலாளி


ஒரு வார்த்தைக்காக….

 

 சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு. முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அன்னியமாகிவிடப் போகிறது. எது எப்படிப் போனாலும் காரில் பத்து மணிக்கெல்லாம் போய் அலுவலக இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக ஓடின ஓட்டம் ஓயப்போகிறது… இந்த “முற்றுப்புள்ளி’யைக் கொண்டாட மனமகிழ்மன்றத்தினர் பணி ஓய்வு பாராட்டு விழா ஒன்று வைப்பார்கள். ஓய்வு பெற்றவருக்கு ஒரு பொன்னாடையைப் போர்த்தி, அரை சவரனில் ஒரு கணையாழி அணிவிக்கிற கையோடு,


அம்மா நான் பாஸ்

 

 மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான். “ரிஸல்ட் வந்திடிச்சா? நீ பாஸா? ஓ! கங்கராட்ஸ்! என்னோடது? பாக்கலியா? ஓ.கே.!’ என்று சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிப்போய் கம்ப்யூட்டரை “ஆன்’ செய்தான். நிமிடங்களில் ஆகாஷ் ஒன்பதாம் வகுப்பில் பாஸாகிவிட்ட விஷயம் பள்ளியின் வலைப் பதிவிலிருந்து எல்லோரும் தெரிந்து கொண்டாயிற்று. “ஒரு செகண்ட்ல டென்ஷன் படுத்திட்டான் தாத்தா! அவன் ரிஸல்ட்ட பார்த்தவன் என்னோடதையும் பார்த்திட்டுச் சொல்லியிருக்கலாம் இல்லியா?


உரிமை!

 

 வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில் கடுமையை எதிர் பார்த்து பிரத்யேகமாகக் கொண்டுவந்திருந்த துண்டையோ தலையில் போட்டபடி பல கடந்த கால இளைஞர்கள், வரிசையில் காத்திருந்தார்கள். ரேஷன் கடை இலக்கணத்தை மீறாத, கடை ஊழியர்கள் மிகவும் சாவகாசமாக வந்து கடையைத் திறந்ததோடு, வரிசையில் நின்றிருப்பவர்களை வெகு அலட்சியமாகப் பார்த்தபடி, எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக பில் புத்தகத்தை எடுப்பதும், பெரிதாகக் கொட்டாவி


பரமபத பாம்புகள்!

 

 சுற்றுலாப் போகும் குழந்கையின் மனநிலையோடு காலைப் பொழுதில் கண் விழித்தவனுக்கு, பெரும் சவாலைச் சந்திக்கப் போகும் ஒரு காலைப்பொழுது அது என்பதற்கான அறிகுறியேதும் தென்படவில்லை! அடிமாடுகள் அழைத்துச் செல்லப்படுவதுபோல வண்டியில் திணிக்கப்பட்ட கூலித் தொழிலாளர் குழுவில் செந்திலும் இருந்தான். பள்ளி இறுதியாண்டு முடித்த கையோடு, விரட்டிக் கொண்டிருந்த வறுமைக்கு எதிராய் அன்றாடங்காய்ச்சியாய் அவன் உழைக்க வேண்டியிருந்தது கம்பி வேலைக்குச் சென்று நெம்பியெடுக்கப்பட்டதில், “தம்பி கொஞ்சம் தேறிட்டான்!’ என மேஸ்திரி சொல்லக் கேட்டிருக்கிறான். சாலையில் குலுங்கிக் குதித்துச் சென்ற