கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

125 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு முறை தான் பூக்கும்

 

 பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை. வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள். வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். வீட்டில் அப்பாவும், அக்காவும் தோட்ட வேலைகளை


ஈரம் பூத்த நெருப்பு!

 

 டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா? ஒயுங்கா சொல்டா பேமானி.’ “அய! இன்னா சத்தாய்க்கிற. இன்னவோ நானே தூக்கிணு பூட்றாமாதிரி. இத்த நீயே எண்ணிப்பாரு’ என்றபடி தன் கையிலிருந்த லெதர் பேக்கை தூக்கிப் போட்டான் கஜா. கத்தை கத்தையாகத் திணிக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்களைப் பிரித்து எண்ணத் தொடங்கினார்கள். மூன்று லட்சத்து முப்பத்தையாயிரத்து எழுநூற்றைம்பது இருந்தது. பத்தாதேடா கஜா, ஒரு அஞ்சு ரூபாயாவது தேறும்னு


புனரபி பயணம்

 

 மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்; ஜன்னல் கம்பிகளில் தலை சற்றைக் கொருதரம் இடிபடுவதைப் பற்றிய லட்சியம் ஏதுமின்றி, சன்னமான விசும்பலுடன் காயாத கண்ணீர்கோடுகளுடனும்… பாவம், வயதானவள் ; அறுபதுக்கு மேலிருக்கும் நிச்சயமாய்… கூட இருந்த பெரியவரும் அப்படியே ! பேச்சில்லை ; ஓரிருமுறை இருமியதோடு சரி ! வழியில், ஓரிடத்தில் வண்டியை விலகித் தள்ளி நிறுத்தச் சொல்லி, இறங்கிப்போய், ஒரு மினரல்


குறையொன்றுமில்லை!

 

 புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி வந்து கொண்டிருந்தது 420 வேன் ஒன்று. ஒரு வழியாக மேடு ஏறி ஓரிடத்தில் ஓரங்கட்டி நின்றது. வேனில் வந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கினார்கள். மொத்தம் எட்டு நபர்கள் அதில் இருவர் பெண்கள். துப்பாக்கியுடன் இரண்டு போலீஸ்காரர்களும். சாலையின் ஓர் ஓரத்தில் ஒரு தற்காலிக கீற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. நான்கு பக்கமும் கீற்றறினாலேயே அடைக்கப்பட்டிருக்க, முகப்பில் பட்டேரி ஊராட்சி –


கசிவு

 

 சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பு, சென்னையின் புறநகரை ஒட்டியிருந்தது. அமெரிக்காவின் “பெண்டகனை’ நினைவூட்டும் அளவுக்குப் பெரிதாக இல்லையென்றாலும், உயரத்தால் பாதிக்குப் பாதி இல்லையென்றாலும், அந்த மாடலில் உருவாகியிருந்தது அந்தக் காலனி. பலதரப்பட்ட பிரிவினரும் அங்கு குடியிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் திட்டிக்கொண்டதற்குக் காரணமே அங்கு மூன்று நாள் தொடர்ந்து கனமழையால் காலனி வெள்ளக் காடாகி இருந்ததுதான்.