கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

125 கதைகள் கிடைத்துள்ளன.

கிரி, எம்.எல்.ஏ

 

 “பாஸ்..” குரல் கேட்டதும் திரும்பினேன். வண்டியை யூ டர்ன் அடித்து அருகில் வந்த கிரி “ என்ன மச்சான் ஊரையே மறந்துட்டியா.. வந்து வருஷக்கணக்கா ஆகுது?” “ம்.. என்ன பண்றது நிறைய வேலைகள்.. எப்படி இருக்கே?” “ ரொம்ப நல்லாருக்கேன்.. ஐயா நம்ம வார்டுக்கு கவுன்சிலர் தெரியுமில்ல..” “ ம் அம்மா போன் பண்ணியிருந்தப்ப சொன்னாங்க.. என்னால நம்பவே முடியலை கிரி.. நீ எப்படி அரசியலுக்கெல்லாம் போனேன்னு..” “ அதெல்லாம் அப்புறம் பேசிக்கிடலாம்.. வா காபி சாப்பிட்டு


ஓலைக் கிளி

 

 அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ”டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி


மஞ்சள் காத்தாடி

 

 விசாலி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஐந்து மணி ஆனதும், அலாரம் அடித்தது போல, ரப்பர் பந்து மாதிரி துள்ளிக் குதித்து எழுந்துவிடும் விசாலி, படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள். விசா.. குட்மார்னிங்!” அவளை நெருங்கி அணைத்துக் கொண்ட வாசுவுக்கு ‘திக்’ என்று இருந்தது. விசாலியின் உடல் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது. “என்னடா… என்ன உடம்புக்கு?” பதறினான் வாசு. “உம்… ராத்திரியெல்லாம் ஒரே தலைவலிங்க. இப்ப என்னடான்னா ஜுரம் அடிக்குது. வாந்தி வர்ற மாதிரி இருக்கு!” “என்னை எழுப்பியிருக்கலாமில்ல? என்ன பொண்ணு


இராதா மாதவம்

 

 யமுனை நதிக்கரை. காற்றிலே ஈரம் தவழ்ந்தது. கரையோரமாக ஒரு கல்லின் மேல் பளிங்குச் சிற்பமென அமர்ந்திருந்தாள் இராதை. ஆம் ! கோகுலக் கண்ணனின் இராதையே தான். காற்றின் ஈரம் அவள் கண்ணிலிருந்து வந்ததோ என்று நினைக்கும் அளவு அவள் நீண்ட பெரிய விழிகள் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தன. இன்று கண்ணன் வர சற்று தாமதம் ஆன காரணத்தால் வந்த கண்ணீரல்ல அது. ஏனென்றே தெரியாமல் , எதற்கென்றே புரியாமல் மனசு கனக்க வெளியே துளி விழாதபடி பெருகிய


அக்கறைகள்

 

 சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது , அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே என்று நீங்கள் நினைத்தால் , ஒன்று நீங்கள் சென்னைக்கு வந்தறியாதவர்களாக இருக்க வேண்டும் , இல்லை கஷ்டப்படும் ஜீவன்களின் இயக்கங்கள் தெரியாத , ஏழை மனிதர்களையே பார்த்திராத பெரும் செல்வந்தர்களாயிருக்க வேண்டும். நான் சொல்ல வந்தது வளவு வீடுகள் , ஸ்டோர் வீடு , என்று பல பெயர்களால் பல மாவட்டங்களில் குறிக்கப் படும் ஒண்டுக்