கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

123 கதைகள் கிடைத்துள்ளன.

கைக்கு எட்டிய தாத்தா

 

 அதிகாரிக்குரிய நாற்காலியில் உட்காராமல் தட்டச்சருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியின் மீது ரகு உட்கார்ந்திருந்தான். தட்டச்சர் வாசு முதலில் தட்டச்சு செய்யவேண்டிய கடிதத்தை தேர்வு செய்வதில் முனைப்பாக இருந்தான். மரப்பெட்டியின் மீது உட்கார்ந்து அலுவலகத்திற்கு வெளியிலும் பார்வையைச் செலுத்துவதற்கு அந்த இடம் ரகுவுக்கு சற்று வசதியாக இருந்தது. அலுவலகம் பத்து மணிக்குத்தான் என்றாலும் ரகுவும் வாசுவும் தினந்தோறும் தவறாமல் ஒன்பதரைக்கே அலுவலகம் வந்துவிடுவார்கள். தாமதம் ஆகிவிடக் கூடாதே என்று அரக்க பரக்க பதற்றத்தோடு கடைசி நேரத்தில் அலுவலகத்திற்குள் நுழைவது


மூன்று பெருமூச்சுகளும் ஒரு சேனலும்

 

 புதுத்துணி வாங்குவதற்காக தி.நகருக்குப்போய் நாயா பேயா லோல்பட்டு திரும்பினால்தான் அம்மா உள்ளிட்ட மூவர் கமிட்டிக்கு தீபாவளி தீபாவளியாகவே இருக்குமாம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையில் வேலூரிலிருந்து சென்னைக்கு இரயில் ஏறுவது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதால் வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாமல் என்னையும் இழுத்துக்கொண்டு போய் வருவார்கள். இரயில் பயணம் என்பதாலும் புதுத்துணி கிடைக்கிறதென்ற ஆசையினாலும் அவர்களால் இழுபட்டு சென்னைக்குச் சென்று வரவேண்டிய இம்சைக்கு உடன்பட்டு நானும்


முகக் கோலம்

 

 “முகூர்த்தநாள் என்பதால் பஸ்ஸெல்லாம் ஒரே கூட்டமா வருது. என்னால பஸ்ல ஏறவே முடியல்ல, கொஞ்சம் வந்து அழைச்சுட்டுப் போயிடுங்களேன்” என்று செல்பேசியில் மனைவியின் முகம் அழைத்தது. “தோ… வந்துட்டேன் ஒரு பத்து நிமிஷம் அங்கேயே இரு. நிற்க சிரமமா இருந்தா லாங்கு பஜாருக்கா நடந்து போய் வீட்டுக்கு ஏதாவது பழம் அல்லது கேக் வாங்கி வை.” என்று பதிலளித்த உடனே சட்டென்றுதான் புறப்பட்டேன். நான்கு திசைகளிலும் மக்கள் நடப்பதும் ஓடுவதுமாக உள்ள பரபரப்பான சிஎம்சி பேருந்து நிறுத்தத்திற்கு