கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

 

 “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-விக்கிபீடியா கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம். கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த இரண்டு மாதத்தில் நான் ஆயிரம் ரூபாய்க்கு கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்கு புரியும். ஒரு வருடத்திற்கு சுமார்


உம்மா “ஐ லவ் யூ”!

 

 திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் இரவு உணவிற்குச் செல்லுமாறு பரிந்துரைத்தாள். அதிகம் பேசாத மௌன சுபாவத்தை தற்போது ஒரு சில நாட்களாக கடைபிடிக்கும் என் அன்பிற்குரிய மனைவி ஜஸீலாவின் இச்செயல் எனக்கு வியப்பை அளித்தது. அவள் மேலும் தொடர்ந்தாள், “நான் உங்களை நேசிக்கின்றேன், ஐ லவ் யூ வெரி மச்! ஆனால் அவங்களும் உங்களை நேசிப்பதை நான் நன்கறிவேன்.


மாலையில் ஒரு விடியல்

 

 கொக். கொக்.. கொக்… செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது. பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய கோழி முட்டையிட்டு, அடைகாத்து உருவாக்கிய கோழிக்குடும்பம். அப்பாஸின் மேற்பார்வையில், அரை டஜன் குட்டி குட்டி கோழிக் குஞ்சுகளுடன். அந்தத் தாய்க்கோழி கம்பீரமாய் நடைபோட்டுக் கொண்டிருந்தது. வெள்ளையும், பொன்னிறமுமாய் சுறுசுறுப்புடன் அந்த கோழிக்குஞ்சுகள் அழகில் மிளிர்ந்தன. ஏழாவது கோழிக்குஞ்சாக அவைகளின் பின்னே சென்று கொண்டிருந்த அப்பாஸை ரசித்துக் கொண்டிருந்த


வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

 

 தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள்.  முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை: என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக” யாஸ்மின்


கிட்டிப் புள்

 

 கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின் முடிவு நெருங்குகிற்து என்பதன் அறிகுறியாக நல்ல புழுதிக் காற்று அடித்துக்கொண்டிருந்தது.ஆனந்தம் , வருத்தம் , பிரிவுத்துயரம் எல்லாம் சேர்ந்த கலவையாக இருந்தது அவன் மனம். நல்லவேளை அவன் மட்டும் பிடிவாதம் பிடித்து அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்கப் போயிராவிட்டால் பாஸ்கரும் இதே புழுதிக்காட்டிலேயே தான் இருந்திருக்க வேண்டும்.நீச்சல் குளத்தோடு கூடிய அவன் அமெரிக்க வீடு ஞாபகத்தில்