கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

பதினோராவது பொருத்தம்

 

 இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம். ” ‘மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத் துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம்


திருந்தினால் திரை விலகும்…!

 

 தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு. “என்ன பாத்திமா, ஷாகிராவிடமிருந்து செய்தி வந்திருக்கா? என்ன சொல்றா உன் மக?” “பேசியது நம்ம பொண்ணுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!” கண்கள் மலர குழந்தைத் தனமாகக் கேட்டாள் பாத்திமா. “இதென்ன பெரிய விஷயமா? ஷாகிராவை பெங்களூர் காலேஜ்லே சேர்த்ததிலிருந்து பார்த்துகிட்டு தானே இருக்கேன்.மககிட்டே பேசும்போது உன் முகத்தில் காணும் சந்தோஷத்தை!” “இருக்காதாபின்னே! மூன்று


மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி சந்தோஷம். மற்ற நாட்களில் மதரஸாவிற்குச் சென்று விடுவார்கள். லொக்… லொக்… லொக்… லொக்… அந்த அறையிலிருந்து இருமல் சத்தம் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. மூச்சுத்திணறலுடன் தாய் ஜமீலா படும் அவஸ்தையைக்கண்டு நஜீரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. எவ்வளவு வைத்தியம் செய்தும் இந்தப்பாழாய்ப்போன ‘இருமல்’ மட்டும் ஓய மாட்டேங்குதே; தொடர்ந்து


அவன் போட்ட கணக்கு!

 

 அது ஃபஜ்ரு நேரம்! பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது. பாங்கு சொல்லும் அப்துல்லாவின் அந்தக் கணீரென்ற குரல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களையும் தட்டி எழுப்பி விடும். மரியம் ‘ஃபஜ்ரு’த் தொழுகையை முடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இப்ராஹீம் சாஹிபின் வீட்டை அடைந்தாள். அடுக்களையில் ஆயிஷா, சுவையும் மணமும் கலந்த தேநீர் தயாரித்துக்கொண்டு இருந்தாள். அவளது கைப்பக்குவத்தில் தயாரிக்கும் தேநீருக்கு ஒரு தனிச்சுவை உண்டு. “அக்கா வந்துட்டீங்களா?, இன்னும்


மிஸ்டு கால்…

 

 ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க பணிக்கு செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சில அரேபியர்கள், பாகிஸ்தானியர் மற்றும் சாலைப் பணியாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த சிலரை மட்டுமே காண முடிந்தது. ஸவூதியிலிருந்து சில மாதங்களுக்கு முன் இங்கு துபை வந்த எனக்கு இந்த நாட்டின் வித்தியாசமான சூழ்நிலை, ஸவூதியில் நான் இருந்ததோடு ஒப்பிடும்போது ஒரு மனக்குறையைதான் ஏற்படுத்தியது. விடிகாலை நேரத்தில் ‘பஃஜ்ர்