கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

தரையிறங்கும் இறகு!

 

 வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனிகெழவி’ தான் இப்ப அவ பேர். மொத மொதல்ல தனக்கு வெள்ள முடி வரும் போது கூடமுத்துலட்சுமிக்கு மனசுல கிலேசம் இருந்தது கிடையாது. ஆனா, ‘ஏகெழவி’ன்னு பிள்ளைங்க கூப்பிட ஆரம்பிச்சதும் தான், முத்துலட்சுமிக்கு மனசுக்குள் கிலி பிடித்த மாதிரி இருந்தது. சின்னப்பிள்ளையில, கூடப்படிக்கிற பிள்ளைங்க யாராவது ‘முத்து’ன்னு சுருக்கமா கூப்பிட்டாலே அப்பாவுக்குப் பிடிக்காது ‘அதென்ன பேர் வைக்கறது ஒண்ணு, கூப்பிட்றது ஒண்ணு’ன்னு கோபப்படுவார்.


சிவகாசி

 

 சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். .., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…, டுமீல்…, டுமீல்…, டமால்…, டமால்…, தன் குடிசை வீட்டு வாசலில் அம்மா மைடியில் படுத்திருந்த வாணி அண்ணாந்து வானத்தை பார்த்தாள். பக்கத்து அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து வெடிக்கப்படும் பட்டாசுகளின் வெளிச்சமும், சத்தமும் அவளின் கவனத்தை ஈர்த்தது. அம்மா! அப்பா எப்போம்மா வருவாங்க? வேலையை முடிச்சுட்டு வந்துட்டே இருப்பாங்க கண்ணு…, என்கிட்ட இருக்குற பைசாவுல அதுப்போல வெடி வாங்க முடியுமா?! ம் ம் ம் முடியும் மா. நிறைய வாங்க முடியாது., ஆனா, கொஞ்சமா


ஒரு எலிய காதல் கதை

 

 கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ஒரே அறைதான். ஓரத்தில் பாத்ரூம், டாய்லெட். பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பொங்கித் தின்ன ஏற்பட்ட சமையல் மேடை. ஒட்டியிருக்கும் சின்ன பால்கனி. அந்தவீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பார்த்து வந்த


செங்கோட்டை பாசஞ்சர்

 

 லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன் இந்தக் கேள்வியைக் கேட்கவும் கலெக்டர் கொடி அசைக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. சமயங்களில் இப்படித்தான் எல்லாம் சொல்லிவைத்தபடி நிகழ்ந்துவிடுகிறது. ஆல்வின் சொன்ன வார்த்தைகள் என்று இல்லை… இன்று நான் இந்த ரயிலில் பயணப்பட வேண்டும் என முடிவெடுத்ததும், என் அருகே ஆல்வின் வந்து அமர்ந்ததும்கூட அப்படித்தான். ‘செங்கோட்டை பாசஞ்சர் இன்னைக்கித்தான் கடைசி நாள். அந்த


ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா

 

 அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம் நேதாஜி சாலையில் யூனிஃபார்ம் அணிந்த மாணவ – மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கூடம் நோக்கி விரைவார்கள். எதிரே இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு மாடுகள், ஆடுகள், நாய்களைச் சிகிச்சைக்காக அழைத்துவந்திருப்பார்கள். உள்ளே போதுமான இடம் இல்லாத காரணத்தால் வெளியே நிற்க வைத்திருப்பார்கள். வொர்க்ஷாப் வாசலில் இருக்கும் டீக்கடை மாரிமுத்து இவரைப் பார்த்த நிமிடத்தில் டீ கிளாஸை வெந்நீரில் ஊறப்போடுவார்.