கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

வெண்ணிற அன்னம்!

 

 நாங்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது காலை மணி ஒன்பது. என் மகள் ஆர்த்தி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, போர்டிங் பாஸ் வாங்கி வந்தாள். நான் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இளைஞர்களைக் காட்டிலும் இளைஞிகளே அதிகம். இளைஞிகள் எல்லார் முத்திலும் தன்னம்பிக்கை! எனக்கு எல்லாமே புதிது. இந்தக் கூட்டம், இளைஞர்கள், பெண்கள்! ஐந்தாறு வருடங்களாக வீல்சேரில் அடைபட்டுக் கிடந்த எனக்கு இந்த மாற்றங்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. இந்த வருடம் மும்பைக்கு இது என்னுடைய நான்காவது விஸிட். முதல் தடவை


தந்தை சொல் மிக்க…

 

 “கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப் போய் எப்படிக் குறையும் மாரக்கு? மார்க்ஷீட் வாங்கினதுமே கிழிக்கப் போயிட்டான் இவன். ரீ வால்யூவேஷன் எல்லாம் பம்மாத்து. இப்ப திருத்தறவன் முதல்ல கரெக்டக பண்ணவனை விட்டுக் கொடுப்பானா?’ தந்தையொருவர் நாலுசீட் தள்ளி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். சொல்லப் பட்ட பையன் விபூதி இட்டுக் கொண்டு உத்தரத்து ஒட்டடையை வெறித்துக் கொண்டிருந்தான் சரவணன் அப்பாவைப் பார்த்தான். கேட்காதவர் போல அவர் கவனமாக இவன் பார்வையைத் தவிர்த்தார். சரவணன், சட்டைப்


சாயங்கால மேகங்கள்

 

 நன்றி சார்… அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு அணைத்தபடி நகர்ந்தார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பென்ஷன் பேப்பர் சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். சரியான பதில் தராமல் அலைக்கழிக்க விட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இரண்டே சந்திப்புகளில் வேண்டிய விளக்கங்களை பெற்று பிரச்னையை தீர்த்து வைத்த திருப்தி ராஜசேகருக்கு. பெல் அடித்து வரவழைத்த அட்டெண்டரிடம் டீ சொல்லு. அவன் தயங்கியபடி சார் செந்தில்ன்னு ஒருத்தர்


வலியின் மிச்சம்!

 

 ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும் அவரை எப்பவும் மனசால் கூட நொந்தது கிடையாது. ஆனால் இண்டைக்கு ஏஜ் இவ்வளவு நேரம். திருச்சி கே.கே. நகரில் ஒரு கோடியில் கிடந்த அந்த வீட்டினுள் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் அமைதியை விரட்டிக் கொண்டிருந்தது மூத்திர நாற்றம்… “ஏனப்பா…’ தொய்ந்து போன குரலையடுத்து விம்மல் வெடிப்புகள் அச்சிறிய வீட்டினுள் எதிரொலித்தன. காதலும் தேடலும் இருக்கக்கூடியதான 27


விசாலாட்சி +2

 

 “விசா.. இப்படிச் செஞ்சுட்டாளேடி.. பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரில காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்… கோயமுத்தூர் எடுத்திட்டுப் போறாங்களாம்…’ அம்மாதான் பதற்றமும், நடுக்கமுமாய் அழுதபடி வீதியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். தலை கலைந்து அலங்கோலமாய் இருந்தது. திண்ணையில் உட்கார்ந்து கட்டிக் கொண்டிருந்த பூச்சரத்தை அப்படியே போட்டுவிட்டுப் பதறியபடி எழுந்தேன். அம்மாவின் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை எப்போதும் இல்லாதது. “பெரிய அத்தைக்கு போன் வந்துச்சாம். சீமெண்ணெயை ஊத்தி பத்த வெச்சிட்டாளாம். பாவிப் பொண்ணு, உடம்பெல்லாம் பொறிப் பொறியா கிளம்பிடுச்சாம். அவளோட அப்பன் ஏதோ சொல்லிட்டானாம்…