கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

கார்த்திக்கின் அப்பா!

 

 “கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர் மருந்து விடணுமாம்’ என்றான். கண்களில் சொட்டு மருந்தை விட்டதும், “ஆ… ஆ… எரியுது, எரியுதுடா!’ – துடித்தார் அப்பா. “அப்படித்தான் கொஞ்சம் எரியும். சரியாயிடும்!’ என்றாள் நர்ஸ். கையில் கொடுத்துவிட்டுப் போன பஞ்சு உருண்டையை எடுத்துக் கண்களிலிருந்து வழிந்த மருந்தைத் துடைத்து விட்டான் கார்த்திக். “என் பக்கத்திலேயே இரு. எங்கயும் போயிடாதே. டாக்டர் வந்ததுமே என்னைப்


நான் சொல்லலியே?

 

 நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல் இருந்த ஒரு நாளின் காலையில்தான் அவளை பஸ்ஸில் பார்த்தேன். அன்று நான் செல்ல வேண்டிய டிரெயினை மிஸ் செய்துவிட்டதால், பஸ்ஸில் செல்ல வேண்டியதாகிவிட்டது. பின்பு தினமும் சில காலங்கள் நான் பஸ்ஸில்தான் செல்வேன் என்று நான் நினைக்கவில்லை. அவள் பெயர் காயத்ரி. அவள் ரொம்ப அழகு என்று திருப்பித் திருப்பிச் சொன்ன பல்லவியையே சொல்லிச் சொல்லி


ஒரே அச்சு!

 

 முன் மாலைப்பொழுது, பரீட்சை சமயம் ஆதலால் பூங்கா, பிள்ளைகளின் சப்தங்களைப் பறிகொடுத்து, மௌனத்தில் இருந்தது. பூங்காவின் வாயிலருகே இபுருக்கும் சூப்கடையும் கூட, மந்த கதியிலேயே இயங்கியது. ரோஹிணி இரண்டு சூப் கப்களை வாங்கிக் கொண்டு உள்ளே விரைந்தாள். நுழைந்ததுமே ரஞ்சனி இருந்த இடம் தெரிந்துவிட்டது. அருகில் கிடந்த சிமெண்ட் பெஞ்சை லட்சியம் செய்யாமல், ஒரு பெருமரத்தின் நிழலில் – அகண்டு பெரிதாய்ப் படர்ந்து கீழிறங்கும் அதன் இரண்டு வேர்களுக்கு மத்தியில் தன்னைப் பொருத்திக்கொண்டு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள் அவள்.


கியான்!

 

 கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட்போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளை பற்றிய இழிபுராணத்தைப் பாடிக் கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்ஷனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக் கொண்டிருந்தான். தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோஷமாய்க் குரைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள்


கணக்கு தப்புங்க மிஸ்!

 

 எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறாரோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி டீச்சரைக் குறித்த சந்தேகம் இருக்கும். மணி ஒலித்ததும் கௌரி வகுப்பறை வாசலுக்கு வருகிறாரா? அல்லது அவர் வந்ததைப் பார்த்து மணி ஒலிக்கிறதா? என்று ஒரு பட்டிமன்றமே வைத்துவிடலாம். சாலமன் பாப்பையா அல்லது நீதியரசர் கிருஷ்ணய்யராலேயே சரியான ஒரு தீர்ப்பினை வழங்க முடியாத விவகாரம் இது. “குட் மார்னிங் மிஸ்’ என்ற குழந்தைகளின் அன்பினை சிந்தாமல் சிதறாமல்