கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

123 கதைகள் கிடைத்துள்ளன.

மேடைக்கு வரலியா?

 

 பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண மேடையில் ஏதோ சடங்குகள் நடந்த வண்ணம் இருந்தன. அமர்ந்திருப்பவர்களையும் அவர்களது தோற்ற பாவனைகளையும் நோட்டம் விட்டபடி அமர்ந்திருந்தேன். மெல்ல சுழன்று கொண்டிருந்த என் கண்கள் அந்தப் பெண்ணில் நிலைத்தது. “இவள் ரமாவின் ஓர்ப்படிதானே? இந்தத் திருமணத்தில் இவள் எப்படி?’ எனக்குள் குழப்பமாய்க் கேள்வி. அலுவலகத்தில் சக தோழியின் மகள் திருமணம். சென்னை அலுவலகம் வந்து சில


வீட்டுக்கு வரவேயில்லை!

 

 “எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற பார்த்தார் ராஜமாணிக்கம். திரட்டி வைத்திருந்த தைரியமெல்லாம் மகனின் இந்தத் தவிப்புக்கும் பாசத்துக்கும் முன் காணாமல் கரைந்து போவதை அவரது உள்மனம் உணரத்தான் செய்தது. “உட்காரேன்…’ மேல்துண்டால் திருக்குளத்துப் படிக்கட்டைத் தட்டினார். ஆளரவமற்ற மூலை. அரையிருட்டு, குளத்து மீன்கள் அந்த மெல்லிய வெளிச்சத்தில் அசாத்திய ஜொலிப்புடன் துள்ளிக் கொண்டிருந்தன. அப்பா கண்ணெடுக்காமல் அதிலேயே லயித்திருந்தார். “சொல்லுங்கப்பா!’ தான்


நீர்க்குமிழி!

 

 தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும், அதிருப்தியுமே உண்டாகியிருந்தது சின்ராசுக்கு. கோபத்தில் அள்ளிப் போட்டவையில் கையிலிருந்து நழுவி விழுந்த ஃபேன் காற்றினால், மெதுவாக அசைந்தபடியிருந்த அந்த ஃபோட்டோவை எடுத்து, வைத்த கண் மாறாமல் பார்வையில் மேய்ந்த அவர், சட்டென்று முகத்தைத் திருப்பி, தரகரிடம் கேட்டார். “யோவ்… பலராமா.. யாருய்யா இந்தப்புள்ள? ஏஞ் சின்ன மகன் மாடசாமிக்கு ரொம்ப பொருத்தமாயிருப்பா போலிருக்கே. ஜீன்ஸ் பேண்ட்


பயம்

 

 டாக்டர் சார், எனக்குப் பயமா இருக்கு சார். என்னுடைய நடவடிக்கைகளை யாரோ கண்காணிக்கிற மாதிரி இருக்கு. என்னைக் கண்காணிச்சு யாருக்கு என்ன ஆகப் போகிறதுன்னு கல்யாணி கேட்கிறாள். ஆனால், எனக்குப் பயமா இருக்கு சார். என் வீட்டிலேயும், ஆபீஸ்லேயும் ஓட்டுக் கேட்கிற கருவியை வைச்சு ஒட்டுக் கேட்கிறாங்கன்னு தோணுது. நான் பேசறதை ஒட்டுக் கேட்டு யாருக்கு என்ன லாபம்னு மனைவி கேட்கிறாள். ஆனால், இப்படி நினைக்கிறதைத் தவிர்க்க முடியலை சார். நான் எங்கே போனாலும் போலீஸ் வருது.


கார்த்திக்கின் அப்பா!

 

 “கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர் மருந்து விடணுமாம்’ என்றான். கண்களில் சொட்டு மருந்தை விட்டதும், “ஆ… ஆ… எரியுது, எரியுதுடா!’ – துடித்தார் அப்பா. “அப்படித்தான் கொஞ்சம் எரியும். சரியாயிடும்!’ என்றாள் நர்ஸ். கையில் கொடுத்துவிட்டுப் போன பஞ்சு உருண்டையை எடுத்துக் கண்களிலிருந்து வழிந்த மருந்தைத் துடைத்து விட்டான் கார்த்திக். “என் பக்கத்திலேயே இரு. எங்கயும் போயிடாதே. டாக்டர் வந்ததுமே என்னைப்