கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

123 கதைகள் கிடைத்துள்ளன.

சிருங்கார வீணை!

 

 அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ எங்கள் வீட்டுக்கோ வெறுமையைச் சூடிக்கொள்ளுதல் ஒன்றும் புதிதில்லை. ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் அக்கா வந்து சென்றதற்குப் பிந்தைய சில தினங்களுக்கு இந்த வெறுமை நீடித்திருக்கும். அக்கா ஊருக்குக் கிளம்பிப் போன பிறகு நிரம்பி இருக்கின்ற இந்த வெறுமையைப் பற்றிக் கூட ஒருமுறை அவளிடம் சொன்னேன். “ஒன்றும் அற்று, வெறுமையாக இருத்தல் எவ்வளவு பெரிய விஷயம். எவர்


உறவுப் பிரிகை

 

 பின்னிரவாகியும் சதாசிவ தாத்தாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. முள் விழுங்கினாற் போல நெஞ்சுக்குள் குத்தியது. பேத்தி அபியாவுக்குக் கல்யாணம். எல்லா உறவுகளையும் கடைசியாய் ஒருமுறை கல்யாணத்தில் பார்த்து விடலாமென நம்பியிருந்தவருக்கு, மகன் நரசு “உறவில் யாருக்கும் அழைப்பில்லை’ என்று சொன்ன தகவல் பேரிடியாக இறங்கியது. உறக்கமின்றிக் கிடந்தவருக்கு மனைவி லட்சுமியின் நினைவுகள் நிரிந்தன. அவளிருந்தால் இந்நேரம் “தப்பு நரசு, பந்தங்கள் அறுந்துடாமப் பார்த்துக்கறது நம்ம கடமை. உறவுகளைக் கொண்டாடாம உலகைக் கொண்டாட முடியாது. ஒருத்தர் விடாம எல்லாரையும் அழைடா…’


அலை…

 

 “என்ன டிரீட்?’ “ஒரு சில்க்.’ “சரி, 138 சீட்டு ஜெயிக்கறாங்க. ஒண்ணு குறைஞ்சாலும் உங்களுக்கு நான் சில்க் வாங்கித் தரேன்’ என்றார் சம்பந்தம். இருட்டு பிரியாத அதிகாலை நேரத்தில், சம்பந்தத்தோடு பெட் வைத்தக்கொள்வது, அனன்யாவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. சம்பந்தம், ஆளும்கட்சி சேனலில் ரிப்போர்ட்டர். அவள் வருவதற்கு முன்பே கேமராமேனோடு அங்கே ஆஜராகி இருந்தார். நேற்று இரவு தூங்கியே இருக்க மாட்டார். “தலைவர் எழுந்துட்டாராமா?’ “என்ன கேள்வி கேட்கிறாய்?’ என்பது போல் ஒருமாதிரி விழித்துப் பார்த்துவிட்டு, “காலையிலேயே எழுந்துட்டாரு’


ஒரு மாலை விருந்தும்… சில மனிதர்களும்…

 

 வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து போயிற்று, பலவிதமான ஆண், பெண் செருப்புகளுக்கு நடுவே என்னுடையத் தனியாக அவிழ்த்தேன். மணமான புதிதில் கோயிலுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டில் விருந்துக்கோ செல்லும் போதெல்லாம் அருணின் செருப்புகளின் பக்கத்தில் என்னுடையதை விடுவதற்குக் கூட மனமில்லாமல் அவற்றின் மேலேயே வழக்கமாக் கொண்டிருந்தன். முதலில் இதைக் கவனித்த அருணுக்கு நாளடைவில் என் பழக்கம் எரிச்சலூட்டுவதாக மாறியது. அது ஒன்று


ரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்!

 

 புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல் தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத ஊருக்குச் செல்கிறாள். தேவையானவற்றை மறந்துவிடவில்லை என்பதைச் சரி பார்த்த பிறகு லக்கேஜைத் தூக்கிக் கொண்டாள். ரயிலில் டிக்கெட் கிடைக்காது. தக்கலில் போட்டாள் ரயில் பயணம் இலகுவானது. மனசை மிதக்கச் செய்யும். சிறு வயதில் ரயிலில் போவதென அம்மா சொன்னதும் சந்தோஷத்தில் குதிப்பாள். பேருந்தில் செல்வதென்றால் வயிற்றைப் பிரட்டும். கழிவறையில்லாததால் அம்மாவைச் சீண்டி விரலைக் காட்டியதும் அடி