கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 20, 2013

31 கதைகள் கிடைத்துள்ளன.

உரிமை!

 

 வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில் கடுமையை எதிர் பார்த்து பிரத்யேகமாகக் கொண்டுவந்திருந்த துண்டையோ தலையில் போட்டபடி பல கடந்த கால இளைஞர்கள், வரிசையில் காத்திருந்தார்கள். ரேஷன் கடை இலக்கணத்தை மீறாத, கடை ஊழியர்கள் மிகவும் சாவகாசமாக வந்து கடையைத் திறந்ததோடு, வரிசையில் நின்றிருப்பவர்களை வெகு அலட்சியமாகப் பார்த்தபடி, எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக பில் புத்தகத்தை எடுப்பதும், பெரிதாகக் கொட்டாவி


பரமபத பாம்புகள்!

 

 சுற்றுலாப் போகும் குழந்கையின் மனநிலையோடு காலைப் பொழுதில் கண் விழித்தவனுக்கு, பெரும் சவாலைச் சந்திக்கப் போகும் ஒரு காலைப்பொழுது அது என்பதற்கான அறிகுறியேதும் தென்படவில்லை! அடிமாடுகள் அழைத்துச் செல்லப்படுவதுபோல வண்டியில் திணிக்கப்பட்ட கூலித் தொழிலாளர் குழுவில் செந்திலும் இருந்தான். பள்ளி இறுதியாண்டு முடித்த கையோடு, விரட்டிக் கொண்டிருந்த வறுமைக்கு எதிராய் அன்றாடங்காய்ச்சியாய் அவன் உழைக்க வேண்டியிருந்தது கம்பி வேலைக்குச் சென்று நெம்பியெடுக்கப்பட்டதில், “தம்பி கொஞ்சம் தேறிட்டான்!’ என மேஸ்திரி சொல்லக் கேட்டிருக்கிறான். சாலையில் குலுங்கிக் குதித்துச் சென்ற


விருந்தாளி

 

 குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள் படித்துக்கொண்டிருப்பார்கள். தேன்மதி அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருப்பாள். அந்தச் சூழ்நிலைக்கு மாறாக இந்நேரத்துக்கு குழந்தைகள் விளையாடுவது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். வீட்டுக்குள் பிள்ளைகள் விளையாடுவது என்பது கோடை விடுமுறை நாட்களில் மட்டுமே! மற்றபடி எப்போதும் படிப்பு… படிப்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை கொஞ்ச நேரம் ஷட்டில் விளையாடுவார்கள். அதைத் தவிர்த்து விளையாட்டு என்பது அவர்களது அன்றாட நிகழ்வுகளில்


அலைகள் ஓய்வதில்லை!

 

 ராமேஸ்வரம் கடற்கரை அலைகள் ராட்சதமாக எழும்பி கரையை செல்லமாகத் தீண்டிவிட்டுச்சென்றன. நள்ளிரவின் கடுங்குளிரும் காதைக் கிழிக்கும் அலைகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல் கரையில் நின்று பெருங்கடலின் கடைசிவரை பார்வையைக் கூர்மையாக்கிப் பார்த்தாள் பொன்மணி. அவள் காதுகளுக்கு ஒரே ஒலிதான் பரிச்சயம் உண்டு. அதுதான் கப்பலின் சங்கொலி. கச்சத் தீவுக்கு மீன் பிடிக்கச் சென்ற கணவன் ரங்கராசு இன்னும் திரும்பவில்லை. அங்கிருந்த குடிசைவாசிகள் சொன்னார்கள். “”இத்தனை நாள் திரும்பி வராமல் இருக்கானே இன்னுமா நம்பிக்கிட்டிருக்கே…” “”உம் பாடையெடுக்க… உன் வாயைக்


அம்மா சர்க்கரை!

 

 உறவினரகள் எல்லாம் ஒன்று பட்ட லட்டு போன்ற அழகிய குடும்பம் அது.””மீனுக்குட்டி, அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப்போறோம். ஹோம் வொர்க்க செஞ்சுட்டு சமத்தா விளையாடு, ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவோம்.” அப்பா சற்றே கடுமையடன் கூறினாலும் அதிரசம் மாதிரி இனிய வர்தான். இரட்டை ஜடை ஆட… ஆட… குண்டு விழிகளை உருட்டியப்படி, சாக்லெட் வழியும் வாயுடன் “”சரிப்பா” என்றால் மீனு. “”மீனு, உங்க அம்மா டாக்டர்கிட்ட எதுக்கு போறாங்க?” எதிர் வீட்டுப் பூரணி ஆன்டி பதமாய்ச் செய்யாத அல்வா போல